என்று நினைத்து;ஒள் எரி யோனும் ஒளித்தான் - ஒளி பொருந்திய அக்கினித் தேவனும் தன்னை மறைத்துக் கொண்டான். இது காறும்இராவணனுக்கு அஞ்சி அடங்கியிருந்த அக்கினி தேவன், அனுமனை அண்டை கொண்ட பலத்தால், இலங்கை நகரை எரித்தான். இப்போது அனுமன் இலங்கையை விட்டுச் சென்று விட்டதால், அரக்கர்கள் தன்னைப் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் தன்னை மறைத்துக் கொண்டான் அக்கினி தேவன் என்பதாம், (64) |