தெரிவித்துவிட்டது; நறியன தேனொடு கிழங்கும் காயும் அரிதின் தேடி மேல் முறை வைத்தோம் - (ஆதலால்) நல்ல சுவையுள்ளனவான தேனையும் கிழங்குகளையும் காய்களையும் அருமையாகத் தேடிக் கொணர்ந்து முன்னமே ஒழுங்காக வைத்துள்ளோம்; நுகர்ந்தனை மெலிவு தீர்தி என்று - நீ உண்டு, களைப்பைத் தீ்ர்த்துக் கொள்வாயாக என்று சொல்லி; தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை தந்தார் - தாம் விரும்பி உண்ணக் கூடிய இலையுணவு முதலியவற்றை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள். (5) அனுமன் மேனியில் உள்ளபுண்களை நோக்கி வானரர் வருந்துதல் 6012. | தாள்களில், மார்பில், தோளில், தலையினில், தடக் கை தம்மில், வாள்களின்,வேலின், வாளி மழையினின் வகிர்ந்த புண்கள், நாள்கள் மேல்உலகில் சென்ற எண் என, நம்பி கண்ண ஊழ் கொளநோக்கி நோக்கி, உயிர் உக, உளைந்து உயிர்த்தார். |
தாள்களில்மார்பில் தோளில் தலையினில் தடக்கை தம்மில் - (அவ்வானரவீரர்கள்) அனுமனுடைய பாதங்களிலும், மார்பிலும், தோள்களிலும், தலையிலும், பெரிய கைகளிலும்; வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் - அரக்கர்களான பகைவர்களுடைய வாள்களாலும், வேல்களாலும், அம்பு மழைகளாலும், பிளந்து உண்டாக்கப்பட்ட காயங்கள்; உலகில் நாள்கள் மேல் சென்ற எண் என - உலகத்தில் நாள்கள் மேலே கழிந்த எண்கள் போல (அளவு கடந்தனவாய்) நம்பி கண்ண ஊழ் கொள நோக்கி நோக்கி - அனுமனிடத்து உள்ளனவற்றை முறைமை பொருந்த ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து; உயிர் உக உளைந்து உயிர்த்தார் - தம்உயிர் சிந்திப் போகுமாறு வருந்திப் பெருமூச்சுவிட்டார். அனுமன் உடலில்உள்ள புண்கள் அளவற்றன என்பதை, ‘நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என’ என்ற தொடர் காட்டுகின்றது. எண்ணற்றவையைக் குறிக்க ‘வையத்து இறந்தாரை எண்ணிக் |