பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்857

தோள்களும்பூரித்துத்துடித்தன; வியர்வின் துள்ளி தோன்றின -
வியர்வையின் துளிகள் உண்டாயின; மணிவாய் மடித்தது - அழகிய வாய்
இதழ் மடிப்புண்டது; ஆவி வருவது போவது ஆகி மேனி தடித்தது -
உயிர்வருவதும் போவதும் ஆகப் பெற்று உடல் பூரித்தது; என்னே ! -
என்னவியப்பு; தன்மை தேர்வார் யார் உளர் ? - அப்போது இராமபிரான்
அடைந்த நிலைமையை ஆராய்ந்து அறியவல்லார் யாரே உள்ளார் ?
(ஒருவரும் இல்லை என்பதாம்,)

     இராமபிரானுக்குஅப்பொழுது நேர்ந்த மெய்ப்பாடுகளைத் தெரிந்து
உணர்த்துவது எம்மனோர்க்கு இயலாது என்றபடி. துள்ளி - துளி.      (48)

மேலே செய்வனகுறித்து இராமன் விரைதல்

6055.

ஆண்டையின், அருக்கன் மைந்தன், ‘ஐய ! கேள்,
                             அரிவை நம்பால்
காண்டலுக்குஎளியள் ஆனாள்’ என்றலும், ‘காலம்
                             தாழ,
ஈண்டு, இனும்இருத்தி போலாம்’ என்றனன்;
                            என்றலோடும்,
தூண் திரண்டனையதோளான், பொருக்கென
                           எழுந்து சொன்னான்.

     ஆண்டையின்அருக்கன் மைந்தன் - அப்பொழுது சூரியன்மகன்
சுக்கிரீவன்; ஐய ! கேள் - (இராமபிரானை நோக்கி) ஐயனே !
கேட்டருள்வீராக!; அரிவை நம்பால் காண்டலுக்கு எளியள் ஆனாள்
என்றலும் -
பிராட்டி, நாம் நம்மிடம் அழைத்துக் கொணர்தற்கு, எளிய
தன்மையில் உள்ளாள் என்று சொன்ன அளவில்; காலம் தாழ ஈண்டு இனும்
இருத்தி போலாம் என்றனன் -
வீணே காலம் தாமதமாக, இங்கேயே
இருக்கின்றாய் போலும் ! என்று சொன்னான்; என்ற லோடும் - என்ற
சொன்னவுடனே; தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து
சொன்னான் -
தூண் திரண்டிருப்பது போன்ற தோள்களை உடைய
சுக்கிரீவன் விரைவில் எழுந்திருந்து கட்டளையிடுபவனானான்.

     பொருக்கென - விரைவுக்குறிப்பு.                          (49)