வானர சேனைபுறப்படுதல் 6056. | ‘எழுக, வெம் படைகள் !’ என்றான்; ‘ஏ’ எனும் அளவில், எங்கும் முழு முரசு எற்றி,கொற்ற வள்ளுவர் முடுக்க, முந்தி, பொழி திரைஅன்ன வேலை புடை பரந்தென்னப் பொங்கி, வழுவல் இல்வெள்ளத் தானை, தென் திசை வளர்ந்தது அன்றே ! |
வெம் படைகள்ஏ எனும் அளவில் எழுக என்றான் - கொடிய சேனைகள் எல்லாம் ‘ஏ’ உச்சரிக்கும் கால அளவுக்குள் புறப்படுவனவாக என்று சுக்கிரீவன் கட்டளையிட்டான்; கொற்றவள்ளுவர் எங்கும் முழு முரசு எற்றி முடுக்க - வெற்றியை உடைய முரசு அறைவோர், சேனைகள் உள்ள எல்லா இடத்திலும் பெரிய முரசுகளை அடித்து விரைவுபடுத்த; முந்தி பொழி திரை அன்ன வேலை புடைபரந்தென்ன பொங்கி தென்திசை வளர்ந்தது -பின்னடையாத (எழுபது) வெள்ளம் கொண்ட வானரச் சேனைகள், விரைந்து பாய்கின்ற அலைகளை உடைய அந்தக் கடல், தான் இருக்கும் நிலையை விட்டு வெளியிலே பரவினால் போல எழுந்து தெற்குத்திக்கை நோக்கிப் பரவலாயிற்று. வள்ளுவர் - முரசுஅறைவோர். (50) வீரர் எளிதில்வழி நடத்தல் 6057. | வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை, வெய்யோர் பேர்வு இலாக்காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக் கார் நிறத்துஅரக்கர் என்போர் முதலிய, கணிப்பு இலாத, வார் கழல்அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதின் போனார். |
விரைவில்போனார் வீரரும் - விரைவில்புறப்பட்டவர்களாகிய வானரவீரர்கள் எல்லோரும்; வார் கழல் அனுமன் - நீண்ட வீரக்கழலை உடையஅனுமன்; விலங்கல் மேல் இலங்கை - |