385. | பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும் பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட மிதித்தலோடும் அருஞ் சினம்அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி, அங்கம் நெரிஞ்சுற,கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம் நுங்க |
அனுமன் திருவடி ஊன்றநிலை குலைந்த அரக்கர் தம்மாதரைத் தழுவிக்கடலில் விழுந்தனர். பொதுத்திட - துளை உண்டாக. நுங்க - உண்ண. நெரிஞ்சுற - சிதைவுற. (7-1) 386. | விண்ணோர்அது கண்டனர், உள்ளம் வியந்து மேல்மேல் கண் ஓடியநெஞ்சினர், காதல் கவற்றலாலே, எண்ணோடு இயைந்துதுணை ஆகும் இயக்கி ஆய பெண்ணோடு இறைஇன்னன பெற்றி உணர்த்தினாரால். |
தேவர்கள்,அனுமன் செல்வதைக் கண்டனர். சுரசையைப் பார்த்து கூறினர். கண் ஓடிய - இரக்கமுற்ற. (64-1) 387. | பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல், பறையின் விரவுக் குரல்,சுருதிக் குரல், விசயக் குரல், விரவா, அரவக் குலம்உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு போர் உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால். |
பல ஒலிகள்உண்டாகின்றன. பணிலம் - சங்கு. பணை - முரசம், அசனி- இடி. உயிர்த்தல் - ஒலித்தல். (74-1) 388. | வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ, ஏனோரும் நின்று,‘சயம் உண்டு’ என இயம்ப, தான் ஓர் பெருங்கருடன் என்ன, எதிர் தாவிப் போனான்,விரைந்து, கடிதே போகும் எல்லை. |
பசுந்தரு -கற்பகம். (74-2) |