389. | என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந் தோள் வீரன் நின்றனன், நெடியவெற்பின்; நினைப்ப அரும் இலங்கை மூதூர் ஒன்றிய வடிவம்கண்டு, ஆங்கு, உளத்திடைப் பொறுக்கல் ஆற்றான்; குன்று உறழ்புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான். |
எறுழ் - மிக்க. வீரன்- அனுமன், வெற்பு - மகேந்திரமலை (94-1) 2. ஊர் தேடு படலம் 390. | ‘ஊறு மிகவேஉறினும், யானும் அமர் தேரேன், தேறல் இல்அரக்கர் புரி தீமை அது தீர்வுற்று, ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால், மாறும் மதி வேறுபிறிது இல்’ என மதித்தான். |
கடல் தாவு படலம் 88ஆம்பாடலின் (கம்ப. 4828) மறுபதிப்பு. (73-1) 391. | ‘கண்டவனப்பான், மேனி கரக்கும் கருமத்தான், கொண்டல்செறிப்பான், வானரம் என்றும் கொளல் அன்றே; அண்டம்அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்; சண்டைகொடுத்தும் கொள்வன்’ எனத் தான் சலம் உற்றாள். |
அனுமனை இறைவனாகஇலங்கைமாதேவி கருதுதல். சலம் - கோபம். (86-1) 392. | ஆயவன்அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள், ‘முன் நாள் மாய மா நகரம்தன்னை வகுத்து, அயன் என்னும் மேலாம் |
|