| தூயவன் என்னைநோக்கி, “சுந்தரி ! காப்பாய்” என்று, ஆங்கு, ஏயினன், இதற்குநாமம் இலங்கை என்று எவரும் போற்ற. |
அந்தரி -இலங்கைமாதேவி (93-1) 393. | இத் திறம்அனந்த கோடி இராக்கதக் குழுவின் உள்ளார் தத்தம செய்கைஎல்லாம் தனித் தனி நோக்கி, தாங்காது, ‘எத் திறம்இவர்தம் சீரை எண்ணுவது ?’ எனவே, அண்ணல் உத்தமன்தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான். |
இராக்கதரை எண்ணல்அரிது என்ற அனுமன் நினைவு. (120-1) 394. | கிடந்தனன்,வடவரை கிடந்தபோல்; இரு தடம் புயம்திசைகளை அளக்கத் தாங்கிய உடம்பு உறுமுயற்சியின் உறங்கினான், கடை இடம் பெறுதீவினை யாவும் ஏத்தவே. |
வடவரை - மேருமலை. (123-1) 395. | குடம் தரும்செவிகளும், குன்றம் நாணுறத் தடந் தருகரங்களும், தாளும், தாங்குறாக் கிடந்தது ஓர்இருள் எனக் கிடந்துளான்தனை அடைந்தனன்,அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான். |
கும்பகர்ணனைக் கிடந்தஇருள் என்றார். (130-1) 3. காட்சிப்படலம் 396. | எயிலின்உட்படு நகரின் யோசனை எழு-நூறும் அயிலினின் படர்இலங்கை மற்று அடங்கலும் அணுகி, மயல் அறத் தனிதேடிய மாருதி, வனசக் குயில் இருந்தஅச் சோலை கண்டு, இதயத்தில் குறித்தான். |
|