எயில் - மதில்.மயல் - மயக்கம். வனசக் குயில் - தாமரைக் குயில் சீதையைக் குறித்தது. (1-1) 397. | அஞ்சனத்துஒளிர் அமலனை மாயையின் அகற்றி, வஞ்சகத்தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து, இஞ்சி உட்படும்இலங்கையின் சிறையில் வைத்திட, ஓர் தஞ்சம் மற்றுஇலை; தான் ஒரு தனி இருந்து அயர்வாள். |
இஞ்சி- மதில். தஞ்சம் - ஆதரவு. (2-1) 398. | கண்ணின்நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம் கடந்து மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட, விண்ணைநோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து உயிர்க்கும்; எண்ணும் மாறுஇலாப் பிணியினால் இவை இவை இயம்பும் |
சீதையின் அவலம்கூறப்பெறுகிறது. (10-1) 399. | ‘மாய மானின்பின் தொடர்ந்த நாள், “மாண்டனன்” என்று வாயினால் எடுத்துஉரைத்தது வாய்மை கொள் இளையோன் போய், அவன்செயல் கண்டு, உடல் பொன்றினன் ஆகும்; ஆயது இன்னது என்றுஅறிந்திலேன்’ என்று என்றும் அயர்வாள். |
மாயமானின் பின்போய் இருவரும் இறந்தனரோ என்ற ஐயம் சீதைக்கு எழுகிறது. (16-1) 400. | இன்னஎண்ணி, இடர் உறுவாள் மருங்கு, உன் ஓர் ஆயிரகோடி அரக்கியர் |
|