பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்865

 

துன்னு காவலுள், தூய திரிசடை
என்னும் மங்கைதுணைஇன்றி, வேறுஇலாள்.

     உன் - நினைக்கப்படும்.                            (29-1)

401.

தரும நீதிதழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன்தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக்கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனதுஆவி பெற்று உய்ந்துளாள்.

     வீடணன் மகள் திரிசடைதேற்றப்பிராட்டி உய்ந்தாள்.        (29-2)

402.

அன்னள் ஆயஅருந்ததிக் கற்பினாள்
மன்னு சோலையில்மாருதியும் வர,
தன் இடம் துடித்துஎய்துற, சானகி
என்னும் மங்கை,இனிது இருந்தாள் அரோ.

     அனுமன்வர சானகிக்குஇடம்துடித்தது.                   (29-3)

403.

‘தாட்சிஇன்று’ என, திரிசடையும், ‘சாலவும்
மாட்சியின்அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய் !இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன்என அறிந்து நல்குவாய்.

     மலர் உளாள் -இலக்குமி. இக்குறி - நிமித்தம்.             (32-1)

404.

மீட்டும்,அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
‘தோள் தடம்பொரு குழைத் தொண்டைத்
                               தூய்மொழி
கேட்டி; வெங் கடுஎனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை;யாவரும் நடுக்கம் காண்டுமால்.

     தொண்டை -தொண்டைக்கனி போன்ற வாய். கடு - விடம். உற்பாதம்
-துர்நிமித்தம்.                                            (53-1)

405.

சிரம் ஒருமூன்றினார்; திருக்கு மூன்றினார்;
கரம் ஒருமூன்றினார்; காலும் மூன்றினார்;