| ஒன்றும் நீஉணரலை; உறுதி வேண்டுமேல், சென்று,அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு’ என்றான். |
அங்கதன் இளவரசன்ஆகவே அவனையே சரணமாக அடை என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல். (19-13) 514. | என்ற அத்ததிமுகன் தன்னை, ஏனைய வன் திறல் அரசுஇளங் குரிசில் மைந்தனைப் பின்றுதல் அவனைஎன் பேசற் பாற்று நீ; இன்று போய்,அவன் அடி ஏத்துவாய்’ என்றான். |
இதுவும்அது. (19-14) 515. | வணங்கியசென்னியன்; மறைத்த வாயினன்; உணங்கியசிந்தையன்; ஒடுங்கும் மேனியன்; கணங்களோடு ஏகி,அக் கானம் நண்ணினான்- மணம் கிளர்தாரினான் மறித்தும் வந்துஅரோ. |
மீண்டும் ததிமுகன்மதுவனம் வருதல். (19-15) 516. | கண்டனன்வாலி சேய்; கறுவு கைம்மிக, ‘விண்டவன், நம்எதிர் மீண்டுளான்எனின், உண்டிடுகுதும்உயிர்’ என்ன, உன்னினான்; ‘தொண்டு’ என,ததிமுகன், தொழுது தோன்றினான். |
அங்கதன் கோபிக்கவும்ததிமுகன் அவன் அடி பணிதலும். (19-16) 517. | ‘போழ்ந்தனயான் செய்த குறை பொறுக்க !’ எனா, வீழ்ந்தனன்அடிமிசை; வீழ, வாலி சேய், தாழ்ந்து, கைப்பற்றி, மெய் தழீஇக்கொண்டு, ‘உம்மை யான் சூழ்ந்ததும்பொறுக்க !’ எனா, முகமன் சொல்லினான். |
ததிமுகனும் அங்கதனும்ஒருவர்க்கொருவர் மன்னி்ப்புக் கேட்டு சமாதானம் அடைதல். (19-17) |