பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்895

518.

‘யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற, துயர்துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
தாமரைக்கண்ணவன் துயரம் தள்ள, நீர்
போம்’ என,தொழுது, முன் அனுமன் போயினான்.

     அனுமனை முன்னர்இராமனிடம் அனுப்பல்.             (19-18)

519. 

‘வன் திறல்குரிசிலும் முனிவு மாறினான்;
வென்று கொள்கதிரும் தன் வெம்மை ஆறினான்’
என்றுகொண்டு,யாவரும், ‘எழுந்து போதலே
நன்று’ என,ஏகினார், நவைக்கண் நீங்கினார்.

     அனைவரும் மாலையில்மதுவனத்திருந்து புறப்படுதல்.     (19-19)

520.

இப்புறத்துஇராமனும், இரவி சேயினை
ஒப்புற நோக்கி,‘வந்துற்ற தானையர்;
தப்பு அறக்கண்டனம் என்பரோ ? தகாது
அப்புறத்துஎன்பரோ ? அறைதியால் !’ என்றான்.

     இராமன் சுக்ரீவனைப்பார்த்து வினாவுதல். இதுவரை மதுவன
நிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை கூறப்பெற்றன.                 (19-20)

521.

வனை கருங்குழலியைப்  பிரிந்த மாத் துயர்
அனகனுக்கு அவள்எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்தபேர் உவகை மாட்சி கண்டு,
அனுமனும்அண்ணலுக்கு அறியக் கூறுவான்;

     இராமன் மகிழ்ச்சியும்அனுமன் கூற்றும்.              (23-1)

522.

மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால்
                          வைத்த
சேண் பிறந்துஅமைந்த காதல், கண்களின் தெவிட்டி,
                          தீராக்
காண்பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம்
                          தன்னுள்,
ஆண் பிறந்துஅமைந்த செல்வம் உண்டனையாதி
                         அன்றோ ?