‘கற்பிற் சிறந்த ஒருபெண்ணின் உயரிய காதலை அப்பெண் தன் கண்களில் திரட்டி வைத்துக் கொண்டு உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் செல்வம் பெற்ற நீயே உலகில் ஆடவராய்ப் பிறந்தவர் பெற வேண்டிய செல்வத்தை முழுதும் பெற்றவனாக ஆனாய்’ என்று அனுமன் இராமனைப் பாராட்டிய இப்பாடல் உயர்ந்த கருத்துடையதாகும். (35-1) 523. | ‘அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர் எனினும், ஐய !- எயில் புனைஇலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற மயில் புரைஇயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே உயிர்ப்பொடும்,உயிரினோடும், ஊசல் நின்று ஆடுவாரும்.’ |
இலங்கையில் ஆடவரும்மகளிரும் நுகர்ந்து நிற்கும் தன்மை கூறியது. (35-9) 524. | ஆயிடை,கவிகளோடும், அங்கதன் முதலினாயோர் மேயினர்,வணங்கிப் புக்கார், வீரனை, கவியின் வேந்தை; போயின கருமம்முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல் தன்னால், சேயிரு மதியம்என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார். |
அங்கதன் முதலியோர் வருகை. (47-1) 525. | நீலனை நெடிதுநோக்கி, நேமியான் பணிப்பான்; ‘நம்தம்- பால் வரும்சேனைதன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம், சால்புறமுன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி, மால் தரு களிறுபோலும் படைஞர் பின் மருங்கு சூழ.’ |
இராமன் நீலனைநோக்கிச் சேனைகளை அழைத்துக் கொண்டு நேர் வழியை ஆராய்ந்து செல்க எனப் பணித்தல். (49-1) |