526. | என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை கூப்பி, ‘புன் தொழில்குரங்கு எனாது என் தோளிடைப் புகுது’ என்னா, தன் தலை படியில்தாழ்ந்தான்; அண்ணலும், சரணம் வைத்தான்; வன் திறல் வாலிசேயும் இளவலை வணங்கிச் சொன்னான்; |
இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல். (49-2) 527. | ‘நீ இனிஎன்தன் தோள்மேல் ஏறுதி, நிமல !’ என்ன, வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி, நாயகற்கு இளையகோவும். ‘நன்று’ என அவன்தன் தோள்மேல், பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது அன்றே. |
இலக்குவன்அங்கதன் தோள் மேல் ஏறுதல். (49-3) 528. | கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப, காலின் அருள் தரு குமரன்தோள்மேல், அங்கதன் அலங்கல் தோள்மேல், பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில் தங்கும் தெருள் தகு புலவர்வாழ்த்திச் சிந்தினர், தெய்வப் பொற் பூ. |
திருமாலும்,சிவபெருமானும் போல இராமலக்குவர்; கருடனும், விடையும் போல அனும அங்கதர் தோள் மேல் ஏறிப் புறப்படுதல். (49-4) 529. | ‘வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்,வய வெஞ் சேனை எய்திடின்’என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ, |
|