பக்கம் எண் :

898சுந்தர காண்டம்

 

பெய் கனி,கிழங்கு, தேன் என்று இனையன 
                   பெறுதற்கு ஒத்த
செய்ய மால்வரையே ஆறாச் சென்றது, தகைப்பு
                   இல் சேனை.

     நாடுவழியாகச்சென்றால் மக்கள் மயங்கி வருந்துவர் என்று கருதிய
இராமன் ஏவ, வானர சேனை கனி, கிழங்கு, தேன் பெறுவதற்கு ஒத்த மலை
வழியாகத் தெற்கு நோக்கிச் சேறல்.                            (49-5)