பார்க்காதவர்களாய்; இறந்தவர் - போரிட்டு முடிந்தவர்கள்;எண்ணில் ஆவரோ? - இத்தனை பேர் என எண்ண முடிந்தவரோ? |
'கண்' என்பதைக் கண்ணோட்டம் எனக் கொண்டு, மண்ணிலும், விண்ணிலும் மற்றும் முற்றும் வாழ்பவர் உனது கண்ணோட்டத்தால் வாழ்பவரே எனவும் பொருள் கூறலாம். எண்ணல்- மதித்தல். வலம்- வலிமை. |
(26) |
6097. | 'இடுக்கு இவண் இயம்புவது இல்லை; ஈண்டு எனை |
| விடுக்குவையாம் எனின், குரங்கை வேர்அறுத்து, |
| ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு, உன் பகை |
| முடிக்குவென் யான்' என முடியக் கூறினான். |
|
இடுக்கு இவண் இயம்புவதில்லை - இங்கே சொல்லத் தகுந்த துன்பம் எதுவும் இல்லை; ஈண்டு எனை விடுக்குவை யாம் எனின் - இப்போது என்னைப் போருக்குச் செல்ல விடுவாயானால்; குரங்கை வேர் அறுத்து - குரங்கினத்தையே வேருடன் அழித்து; ஒடுக்கரு மனிதரை உயிர் உண்டு - அடக்குவதற்கரிய அம்மானிடரை உயிர் குடித்து; உன் பகை முடிக்குவன் யான் என - உனது பகையை முடிப்பேன் யானே;என முடியக் கூறினான் - என்று முடிவாகக் கூற வேண்டியவற்றைக் கூறினான். |
இடுக்கு - துன்பம் ஒடுக்க அரும் - அடக்க அரிய மனிதர். இராம, இலக்குவர். ஈண்டு-இப்போது. |
(27) |
வச்சிரதந்தன் பேச்சு |
6098. | இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின், |
| வச்சிரத்துஎயிற்றவன் வல்லை கூறினான். |
| அச் சிரத்தைக்கு ஒரு பொருள் இன்று, ஆயினும், |
| பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான். |
|
இச்சிரத்தவன் - இந்தத் தலைமை பொருந்திய மகோதரன்; உரைத்து இறுக்கும் ஏல்வையின் - இவ்வாறு கூறி முடிக்கும் சமயத்திலே;பச்சிரத்தம் பொழி - பச்சை இரத்தம் பொழிகின்ற; பருதி கண்ணினான் - சூரியனைப் போன்ற கண்களை உடையவனாகிய;வச்சிரத்து எயிற்றவன் - வச்சிரதந்தன் என்பவன்; அச்சிரத்தைக்கு - அவன் கூறும் அந்த உறுதி |