மொழிகளுக்கு; ஒரு பொருள் இன்று ஆயிலும் - ஒரு பயனும் இல்லை என்றாலும்; வல்லை கூறினான் - விரைந்து கூறுவானானான். |
சிரத்தவன் - தலைமை வாய்ந்தவன் என்றது மகோதரன். ஏல்வை-சமயம். சிரத்தை-உறுதி இங்கு உறுதி மொழியை உணர்த்தும். பச்சைரத்தம் - பச்சிரத்தம் எனத் திரிந்தது. வச்சிரம் போன்ற பற்களை உடையவன் என்பதால் வச்சிரதந்தன் எனப்பட்டான். |
(28) |
6099. | ' "போய் இனி, மனிசரைக் குரங்கைப் பூமியில் |
| தேயுமின், கைகளால்; தின்மின்" என்று எமை |
| ஏயினை இருக்குவது அன்றி, என், இனி |
| ஆயும் இது? எம்வயின் அயிர்ப்பு உண்டாம்கொலோ? |
|
இனி, போய் - இனிச் சென்று;மனிசரை, குரங்கை - அந்த மனிதர்களையும், குரங்குகளையும்;பூமியில் கைகளால் தேயுமின் - நிலத்தோடு சேர்த்து கைகளால் தேய்த்துக் கொல்லுங்கள்; தின் மின் - அவர் உடல்களைத் தின்னுங்கள்; என்று - என்றுகூறி; எமை ஏயினை இருக்குவதன்றி - எங்களை ஏவி விட்டு, வாளா இருப்பதல்லாது;என் இனி ஆயும் இது- என்ன ஆராய்ச்சி வேண்டியுள்ளது? எம் வயின் - எங்கள் மேல்; அயிர்ப்பு உண்டாம் கொலோ - ஏதேனும் சந்தேகம் உண்டோ? |
போயினி என்பதை இனிப் போய் என இயைக்க. இப்போதே ஏயினை-ஏவி முற்றெச்சம். இருக்குவது - இருப்பது இனி-இனி மேலாவது என்பதும் பொருந்தும். |
(29) |
6100. | 'எவ் உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத் |
| தெவ்வினை அறுத்து, உனக்கு அடிமை செய்த யான் |
| தவ்வின பணி உளது ஆகத்தான்கொலோ. |
| இவ் வினை என்வயின் ஈகலாது?' என்றான். |
|
எவ்வுலகத்தும் - எந்த உலகத்தில் வாழ்பவராயினும்; நின் ஏவல் கேட்கிலா - உனது கட்டளைப்படி கேட்டு நடவாத; தெவ்வினை அறுத்து - பகைவர்களை அடியோடு அழித்து; உனக்கு அடிமை செய்த யான் - இது வரை உனது அடியவனாகப் பணி செய்த நான்; தவ்வின பணி உளது ஆகத்தான் கொலோ - தவறி விட்ட பணி இருப்பதென்பதாலோ; இவ்வினை - இந்தப் |