போர் புரியும் செயலை; என் வயின் ஈகலாது- என்னிடம் தராமல் விட்டது; என்றான். |
தவ்வுதல்-தவறுதல். ஈகலாதது என்பது ஈகலாது என்று தொகுக்கப்பட்டது விகாரம். 'இவ்வினை' என்றது இராம, இலக்குவர்களையும், வானர சேனையையும் அழித்து வர அனுப்பும் பணி. |
(30) |
துன்முகன் உரை |
6101. | 'நில், நில்' என்று, அவன்தனை விலக்கி, 'நீ இவை |
| என் முனும் எளியர்போல் இருத்தியோ?' எனா, |
| மன் முகம் நோக்கினன், வணங்கி, வன்மையால், |
| துன்முகன் என்பவன், இனைய சொல்லினான்: |
|
துன்முகன் என்பவன் நில் நில் என்று அவன்தனை விலக்கி- துன்முகன், நில் நில் என்று அந்த வச்சிரதந்தனை விலக்கி; நீ இவை என்முனும் எளியர் போல் இருத்தியோ- (இராவணனை வணங்கி) நீ இத்தகைய சொற்களை எனக்கு முன்னால் எளியவரைப் போலக் கூறி இருக்கப் போமோ? எனா, மன்முகம் நோக்கினன் வணங்கி- என்று கூறி, அரசனான அவனை வணங்கி, நோக்கி; வன்மையால் - தனது வலிமை புலப்பட (சினம் கொண்டு), இனைய சொல்லினான் - இவ்விதமாகப் பேசலானான். |
அவன்-வச்சிரதந்தன், மன் - அரசன் (இராவணன்) என்றது பின்னர் கூறுவனவற்றை. 'அடியவர் முன் தலைவர் குறை புலப்பட பேசுதல் கூடாது' என்பதால் 'என்முனும் எளியர் போல் இருத்தியோ' என்றான். |
(31) |
6102. | 'திக்கயம் வலி இல; தேவர் மெல்லியர்; |
| முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது; |
| மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின், |
| அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே! |
|
திக்கயம் வலியில- (இராவணனுக்கு) திக்கு யானைகள் வலிமை இல்லாதவாயின; தேவர் மெல்லியர் - தேவர்களும் தோற்று மெலிந்தனர்; முக்கணான் கயிலையும் - முக்கண் மூர்த்தியான சிவபிரான் வாழும் கைலாயமலையும்; முரண் இன்று ஆயது - வலிமை இல்லாதது ஆயிற்று; மக்களும் குரங்குமே - |