பக்கம் எண் :

28யுத்த காண்டம் 

மனிதர்களும் குரங்குகளுமே; வலியர் ஆம் எனின் - வலிமை
உடையவர்கள் என்றால்; இராவணனுக்கு அமைந்த ஆற்றல்-
இலங்காதிபனான  இராவணனுக்கு அமைந்த வலிமை; அக்கட-
ஆச்சரியப்படத்தக்க தொன்றே.
 

திக்கு + கயம் - திக்கயம். முரண் - வலிமை. 'அக்கட'
என்பது அதிசயம்  என்ற பொருள் கொண்ட திசைச்சொல்
தெலுங்குச் சொல் என்பர்.
 

(32)
 

6103.

'பொலிவது, பொதுவுற எண்ணும் புன் தொழில்
மெலியவர் கடன்; நமக்கு இறுதி வேண்டுவோர்

 

வலியினர்எனில், அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ-
ஒலி கழல் ஒருவ !-நம் உயிருக்கு அன்பினால்?
 

ஒலிகழல் ஒருவ - ஒலிக்கின்ற  கழல்   பூண்ட ஒப்பற்ற
தலைவனே;   பெலிவறு -   எதிர்காலத்தில்  நிகழப்போகும்
காரியங்களை; பொது உற - நடுவு நிலை பொருந்த; என்னும்
புண்தொழில்-ஆராயும் இழிந்த  செயல்;  மெலியவர் கடன்
- வலிமையில்லாதவர்களின் கடமையாகும்;   நமக்கு  இறுதி
வேண்டுவோர்   -  நம்  முடிவை   விரும்பும்   பகைவர்;
வலியினர் 
எனின்  - வலிமை உடையவர்  என்றால்;   நம்
உயிருக்கு 
அன்பினால்  -   நமது    உயிர்மேல்  வைத்த
அன்பினால்;    அவர்க்கு    ஒதுங்கி    வாழ்துமோ -
அவர்களுக்கு எதிர்படாமல் ஒதுங்கி வாழ்வோமோ?
 

ஒருவன்-ஒப்பற்றவன் (இராவணன்) பொலிவது-எதிர்கால
நிகழ்ச்சி. பொது உற-நடு நிலை பொருந்த.
 

(33)
 

6104.

'கண்ணிய மந்திரக் கருமம் காவல!-
மண் இயல் மனிசரும், குரங்கும், மற்றவும்,
உண்ணிய அமைந்தன; உணவுக்கு உட்குமேல்,
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே?
 

காவல- அசுரர் குல காவலனே! கண்ணிய மந்திரக் கருமம்
- நாம்  கருதிய  மந்திராலோசனை ஆகிய காரியம்;  மண்ணியல்
மனிசரும ் -   நிலத்திலே   நடந்து    திரியும்    இயல்புடைய
மனிதர்களும்;    குரங்கும்  -    குரங்குகளும்;    மற்றவும்  -
பிறவற்றையும்    பற்றியதாகும்;      உண்ணிய    அமைந்த -
அவையெல்லாம்    நாம்      தின்பதற்கு   அமைந்தவையாகும்;
உணவுக்கு உட்குமேல்
- உணவுப்பொருளுக்கு