பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 29

நாம் பயந்தோம் என்றால்;திண்ணிய அரக்கரில் - வலிமை
மிக்க அரக்கராகிய நம்மைவிட; தீரர்  யாவரே  - வீரர்கள்
யாருள்ளார்?
 

கண்ணுதல்-கருதுதல். உட்குதல்-அஞ்சுதல் அரக்கர்களில்
தீரர் யாவரே என்றது இகழ்ச்சி குறிப்பாம்.
 

(34)
 

6105.்

'எரி உற மடுப்பதும், எதிர்ந்துளோர் படப்
பொரு தொழில் யாவையும் புரிந்து, போவதும்
வருவதும், குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து,
அரிதுகொல், இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்?
 

வருவதும்-  நாம்  வாழும் ஊராகிய  இலங்கை மாநகருக்கு
வருவதும்; எரி உற  மடுப்பதும் -   ஊருக்குத்  தீ இடுவதும்;
எதிர்ந்துளோர்      பட   -   எதிர்த்தவர்    இறக்கும்படி;
பொருதொழில் -  போர்   புரியும்  தொழில்கள்;  யாவையும்
புரிந்து  -   எல்லாவற்றையும்   செய்து; போவதும் - ஊரைக்
கடந்து  தப்பிப் போவதும்; குரங்கு -   ஒரு குரங்கு  செய்யும்
செயலாயிற்று;  கடந்து நம் வாழ்க்கை ஊர் -  நாம்  வாழும்
ஊரைக்கடந்து;   இராக்கதர்க்கு -  அரக்கர்களாகிய  நமக்கு;
ஆழி நீந்துதல்  - கடலை  நீந்திக்  கடப்பதென்பது;  அரிது
கொல்- செய்ய இயலாத அரிய செயலோ?
 

(35)
 

6106.

'வந்து, நம் இருக்கையும், அரணும், வன்மையும்,
வெந் தொழில் தானையின் விரிவும், வீரமும்,
சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர்,
உய்ந்து தம் உயிர்கொடு இவ் உலகத்துள் உளார்?
 

வந்து நம் இருக்கையும் - இலங்கைக்கு  வந்து நாம் வாழும்
நமது    இருப்பிடங்களையும்;     அரணும்   -   இலங்கைக்குப்
பாதுகாப்பான அரண்களையும்; வன்மையும்- நமது வலிமையையும்;
வெந்தொழில்  -  கொடிய போர்த்தொழில்  வல்ல;  தானையின்
விரிவும்  -    சேனையின்   பாப்பையும்;   வீரமும்  -  அதன்
ஆற்றலையும்;  சிந்தையின் உணர்பவர்  -  மனத்தினால் அறிய
வல்லவர்கள்;    உய்ந்து   தம்   உயிர்  கொடு  -  நம்மிடம்
பகைத்து   பிழைத்து  உயிருடன் சென்றவர்கள்;  இவ்வுலகத்துள்
உளார்   - இவ்வுலகத்திலே   இருப்பவர்கள்; யாவரே சிலர் -
சிலரேனும் யார் இருக்கிறார்கள்?