பக்கம் எண் :

30 யுத்த காண்டம்


வந்து - இலங்கைக்கு வந்து. இருக்கை - இருப்பிடம்
வெம்தொழில்- கொடிய போர்த்தொழில். கொண்டு என்பது
கொடு என விகாரமாயிற்று.

(36)

6107.

'ஒல்வது நினையினும், உறுதி ஓரினும்,
வெல்வது விரும்பினும், வினையம் வேண்டினும்,
செல்வது அங்கு; அவருழைச் சென்று, தீர்ந்து அறக்
கொல்வது கருமம்' என்று உணரக் கூறினான்.
 

ஒல்வது நினையினும் - பொருந்தும் விதத்தை நினைத்துப்
பார்த்தாலும்; உறுதி ஓரினும் - நமக்கு உறுதி பயப்பனவற்றை
ஆராயினும்; வெல்வது விரும்பினும் - நாம் வெற்றியடைய
விரும்பினாலும்; வினையம் வேண்டிலும் - அந்த வெற்றிக்குரிய
வினையத்தை வேண்டினாலும்; செல்வது அங்கு - செல்ல
வேண்டியது அங்கேதான்; அவர் உழை சென்று - அந்தப்
பகைவர் இருக்குமிடம் சென்று; தீர்ந்து அறக் கொல்வது
கருமம்
- அவர்கள் இறந்து அழியும்படி கொல்வதே
செய்யவேண்டிய செயலாகும்; என்று உணரக் கூறினான் -
என்று இராவணன் உணரும்படி கூறினான்.

ஒல்வது-பொருந்துவது. உறுதி-நன்மை. வினையம்-சூழ்ச்சித்திறம்.
கருமம்-செய்யத்தக்க காரியம்.

(37)

மகா பார்சுவன் கூற்று

6108.

காவலன் கண் எதிர், அவனைக் கை கவித்து,
'யாவது உண்டு, இனி நமக்கு?' என்னச்

சொல்லினான்;

'கோவமும் வன்மையும் குரங்குக்கே' எனா,-
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான்.
 

மாபெரும் பக்கன் என்று ஒருவன்- மகா பார்சுவன் என்னும்
பெயர் கொண்ட ஒருவன்; வன்மையான் - ஒப்பற்ற வலிமை
மிக்கவன்; காவலன் கண் எதிர் - அரசனான இராவணன் கண்
எதிரிலேயே; அவனை கை கவித்து - துன்முகனை நீ கூறியது
போதுமெனக் கை கவித்து; யாவது உண்டு இனி நமக்கு- (ஒரு
குரங்கு செய்த காரியத்துக்கு வருந்தி ஆலோசனை
செய்வதென்றால்) இனி நமக்கு என்ன பெருமை இருக்கும்?
கோவமும் வன்மையும் குரங்குக்கே- கோவமும் வலிமையும்