பக்கம் எண் :

976யுத்த காண்டம் 

கொச்சகக் கலிப்பா
 

7623.

சிந்துரச் செம் பசுங் குருதி திசைகள்தொறும் திரை

ஆறா,

எந்திரத் தேர், கரி, பரி, ஆள், ஈர்த்து ஓடப்

பார்த்திருந்த

கந்தரப் பொன்-கிரி ஆண்மைக் களிறு அனையான்,

கண் நின்ற

சுந்தரப் பொன்-தோளானை முகம் நோக்கி, இவை

சொன்னான்;

 

சிந்துரச்  செம்   பசுங்குருதி-  சிந்துரப்  பொடி  போன்ற
புதிய  பசிய  குருதி; திசைகள் தொறும் திரை  ஆறா- திசைகள்
தோறும் அலைகளை உடைய ஆறாக ஓடி; எந்திரத் தேர் கரி பரி
ஆள்
-  பொறிகள்   அமைந்த   தேர்களையும்   யானைகளையும்,
குதிரைகளையும்  வீரர்களையும்;  ஈர்த்து  ஓடப்   பார்த்திருந்த
- இழுத்துக்  கொண்டு செல்வதைப்  பார்த்துக்  கொண்டு  இருந்த;
கந்தரம்  பொன்கிரி  -   தலையை  உடைய  பொன்கிரியையும்;
ஆண்மைக் களிறு அனையான்- வீரம் பொருந்திய களிற்றையும்
ஒத்தவனான  கும்பகருணன்;  கண்  நின்ற- தன்  கண்  எதிரில்
நின்ற; சுந்தரப் பொன்   தோளானை- மிக அழகிய  தோளினை
உடைய  இராமனது; முகம்   நோக்கி   இவை   சொன்னான்
- முகத்தைப் பார்த்து இச்சொற்களைக் கூறினான்.
 

(352)
 

7624.

'புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை

புக்க

மைக் கடங் கார் மத யானை வாள் வேந்தன் வழி

வந்தீர்!

இக் கடன்கள் உடையீர்! நீர் எம் வினை தீர்த்து,

உம்முடைய

கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர், என்

கடைக்கூட்டால்.

 

புக்கு அடைந்த புறவு ஒன்றின்  பொருட்டாக- தன்னைச்
சரணாகதி அடைந்த புறா ஒன்றின் பொருட்டாக;  துலை  புக்க-
தராசுத் தட்டில்  ஏறிய; மைக்கடங்கார்  மதயானை    வாள்
வேந்தன்  வழிவந்தீர்
- கருமையான  மதநீரை  மேகம் போல்
பொழிகின்ற