பக்கம் எண் :

978யுத்த காண்டம் 

7626.

'வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன்,

வேரோடும்

கல்லுமா முயல்கின்றான், இவன்" என்னும்

கறுவுடையான்;

ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி,

கோடாதாய்!

 

கோடாதாய்- நீதிநெறி தவறாதவனே; வெல்லுமா நினைக்கின்ற
வேல்    அரக்கன் 
-   வெல்லுமாறு     எண்ணுகின்ற    வேல்
படையை உடையவனாகிய இராவணன்; இவன் வேரோடும் கல்லுமா
முயல்கின்றான்   என்னும் 
- இவ்வீடணன்  தன்னை  அடியோடு
அழிக்க முயல்கின்றான்  என்னும்;  கறுவுடையான் -  உள்ளடங்கிய
வஞ்சம்    உடையான்; ஒல்லுமாறு    இயலுமேல்  -   வாய்ப்பு
நேருமானால்; அவன் இவனை- அந்த இராவணன் இந்த வீடணனை;
உடன் பிறப்பின்   பயன்   ஓரான்   கொல்லுமால்  -  உடன்
பிறப்புப்   பாசத்தின்   பயனை   உணராதவனாய்க்   கொல்லுவான்;
குறிக்கோடி- இதனை மனதில் கொள்.
 

உடன்பிறப்பின்   பயன்  ஓரான்  என்ற  தொடர் கும்பகருணன்
உடன்பிறப்பின்   தன்மையை உணர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது.
இப்பிறவியில்  உடன்பிறந்தவர்   அடுத்த பிறவியில் உடன்பிறந்தவர்
ஆகப்   பிறக்க   வேண்டிய   நியதியில்லை ஆகையால் இவ்வாறு
குறிப்பிட்டான்  என்க.  கல்லுதல் - அழித்தல். கறு - உள்ளடக்கிய
வஞ்சம். செயிர்ப்பு என்றார் பிறரும். ஒல்லுமாறு இயலுமேல்-வாய்ப்பு
நேருமானால்.
 

(355)
 

7627.

'தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான், அத்

தகவு இல்லான்;

நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும்; இறை

நல்கானால்;

உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான்,

ஒரு பொழுதும்

எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன்.
 

நம்பி- ஆடவரில்  சிறந்தவனே!; அத்தகவு  இல்லான்- அந்த
நற்குணமில்லாதவனாகிய   இராவணன்;   தம்பி  என  நினைந்து
இரங்கித் தவிரான்
- வீடணன்  தம்பி  ஆயிற்றே  என்று  எண்ணி
இரக்கம் கொண்டு உயிரோடு விட்டிடான்; இவன்தனைக் காணின்