தம்பியின் உயிருக்காக வேண்டியவன் தன் மானத்துக்காக இதனை வேண்டுகிறான். எதிர்மறைத் தொழிற்பெயர். |
(357) |
7629. | 'வரம் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று' |
| என்று, ஒரு வாளி |
| உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண் |
| உள் கொளுவா, |
| சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின் |
| கடும் படையால், |
| அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள் |
| அழுத்தினான். |
|
வரம் கொண்டான் - கும்பகருணன் வரமாகக் கேட்டுக் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று- ஆகையால் இனி மறுத்தல் முறைமையன்று; என்று ஒருவாளி- என்று கருதி ஓரம்பினை; உரம் கொண்ட தடஞ்சிலையின் உயர் நெடுநாண் உல் கொளுவா- வலிமை கொண்ட பெரிய வில்லின் சிறந்த நெடிய நாணைப் பூட்டி உள்ளே வைத்து; சிரம் கொண்டான்- எய்து கும்பகருணனது தலையை அறுத்தான்; கொண்டதனை- அறுத்த அந்தத் தலையை; திண் காற்றின் கடும் படையால்- வலிய காற்றின் கடிய அம்பினால்; அரம் கொண்ட கருங்கடலின அழுவத்துள் அழுத்தினான்- ஒலி கொண்ட கரிய கடலின் நடுவில் உள்ளே விழச் செய்தான். |
(358) |
கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல் |
7630. | மாக் கூடு படர் வேலை மறி மகரத் திரை வாங்கி, |
| மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு திக்கூடு, |
| போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும் புகை |
| உயிர்க்கும் |
| மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் முகக் |
| குன்றம். |
|
மாக்கூடு படர்வேலை- கருமை நிறம் மிகக் கூடியுள்ள பரந்த கடலில்; மறி மகரத்திரை வாங்கி- மடங்குகின்ற அலைகளை அப்பால் தள்ளி; மேக்கூடு, கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு - மேற்கிலும், கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திசைகளிலும்; |