போக்கூடு கவித்து - இடையே போதல் தவிர்த்து; இருகண் செவியூடும்- இரு கண்களிலும்; புகை உயிர்க்கும்- புகையை வெளிப்படுத்தும்; அம்முகக் குன்றம் - அந்த முகமாகிய சிறுமலை; மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது- மூக்கு வழியாகவும் நீர் உள்புகுதலால் மூழ்கியது. |
கடலில் மலை போன்ற முகம் விழவே கடல் நீர் முதலில் நான்கு பக்கங்களிலும் விலகியது. அந்த முகம் அறுபட்ட மூக்கின் வழி கடல் நீர் புகுந்ததால் மூழ்கி விட்டது. |
(359) |
7631. | ஆடினார் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை |
| பாடினார்; மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்; |
| கூடினார் படைத்தலைவர், கொற்றவனை; குடர் |
| கலங்கி |
| ஓடினார், அடல் அரக்கர், இராவணனுக்கு |
| உணர்த்துவான். |
|
வானவர்கள் ஆடினார்- வானவர்கள் ஆடினார்; அரமகளிர் அமுத இசை பாடினார்- தேவமகளிர் அமுதம் போன்ற இசைப் பாடலைப் பாடினார்; மாதவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்- தவமுனிவர்களும் அந்தணர்களும் அச்சம் நீங்கினார்கள்; கொற்றவனைப் படைத்தலைவர் கூடினார்- வானரப் படைத் தலைவர் வெற்றி பெற்ற இராமனைக் கூடினார்; அடல் அரக்கர் குடர் கலங்கி- கொல்லும் தன்மையுள்ள அரக்கர்கள் குடர் கலங்கி; இராவணனுக்கு உணர்த்துவான் ஓடினார் - இராவணனுக்கு உணர்த்துவதற்காக ஓடினார்கள். |
வானவர் ஆட, அரமகளிர் பாட, மாதவரும் வேதியரும் பயம் தீர, படைத்தலைவர் கொற்றவனைக் கூட, அடல் அரக்கர் குடர் கலங்கி இராவணனுக்கு உணர்த்துவான் ஓடக் கும்பகருணன் இறந்தனன் என்க. |
(360) |