மிகைப் பாடல்கள் |
1. கடல் காண் படலம் |
530. | மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த் | |
| தான் திகழ் தசமுகத்து அவுணன், சாலவும் | |
| ஆன்ற தன் கருத்திடை, அயனோடே மயன் | |
| தோன்றுற நினைதலும், அவரும் துன்னினார். | (11-1) |
|
531. | வந்திடும் அவர் முகம் நோக்கி, மன்னவன், | |
| 'செந் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத் | |
| தந்திடும், கணத்திடை' என்று சாற்றலும் | |
| புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார். | (11-2) |
|
2. இராவணன் மந்திரப் படலம் |
|
532. | மின் அவிர் குழைகளும் கலனும் வில் இட, | |
| சென்னியின் மணி முடி இருளைச் சீறிட, | |
| அன்னபேர் அவையின் ஆண்டு இருந்த ஆண்டகை | |
| முன்னியது உணர்த்துவான், முறையின் நோக்கினான். | (6-1) |
|
533. | மோதரன் முதலிய அமைச்சர் தம் கணக்கு | |
| ஓதும் நூறாயிர கோடியோரொடும், | |
| காது வெஞ் சேனையின் காவலோர் கணக்கு | |
| ஓதிய வெள்ள நூறவர்கள்தம்மொடும். | (10-1) |
|
534. | கும்பகம் மேவியோன், குறித்த வீடணத் | |
| தம்பியர் தம்மொடும், தருக்கும் வாசவன் | |
| வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம், | |
| உம்பரும் போற்றுதற்கு உரிய, மைந்தரும், | (10-2) |