535. | மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர் | |
| மேலவர் தம்மொடும், விளங்கு சுற்றமாம் | |
| சால்வுறு கிளையொடும், தழுவி, மந்திரத்து | |
| ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான்: | (10-3) |
|
536. | பின்னும் ஒன்று உரைத்தனன்: 'பிணங்கு மானிடர் | |
| அன்னவர் அல்லர்; மற்று அரக்கர் என்பதற்கு | |
| இந் நிலை பிடித்தனை; இறைவ! நீ' எனா, | |
| முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான். | (21-1) |
|
537. | 'எரி விழி நுதலினன், இசையும் நின் தவத்து | |
| அருமை கண்டு, அளித்தனன் அழிவு இலாதது ஓர் | |
| பெரு வரம் என்றிடின், பேதை மானிடர் | |
| இருவரும் குரங்கும் என் செய்யல் ஆவதே?' | (26-1) |
|
538. | 'கறை மிடற்று இறை அன்று; கமலத் தேவு அன்று; | |
| நிறை கடல் துயில் பரன் அன்று; நின்று வாழ் | |
| சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர் | |
| உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ?' | (40-1) |
|
539. | 'ஓது பல் அருந் தவம் உஞற்றல் இலதேனும், | |
| கோதுறு குலச் சிறுமை கொண்டுடையதேனும், | |
| வாதுறு பகைத் திறம் மலிந்துடையதேனும், | |
| நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ? | (52-1) |
|
540. | 'உந்து தமரோடு உலகினூடு பல காலம் | |
| நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ, | |
| சிந்தையில் விரும்புதல் மங்கையர் திறத்தோ, | |
| புந்திகொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள்? | (52-2) |
|
541. | 'ஆசைகொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி, | |
| காசு இல் ஒரு மங்கையவளைத் தனி கவர்ந்தும், | |
| கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய், | |
| வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ? | (52-3) |