பக்கம் எண் :

984யுத்த காண்டம் 

542.'நிரம்பிடுகில் ஒன்றுஅதை நெடும் பகல் கழித்தும்,
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை;
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன், ஐயா!(52-4)
 
543.'ஆசு இல் பல அண்டம் உனதே அரசுஅது ஆக
ஈசன் முன் அளித்தது, உன் இருந் தவ வியப்பால்;
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ?--
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா!(52-5)
 
544.' "ஆலம் அயில்கின்றவன் அருஞ் சிலை முறித்து,
வாலியை வதைத்து, எழு மராமரமும் உட்க,
கோல வரி வில் பகழி கொண்டுடையன்" என்றார்;
சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ?(52-6)
 
545.'ஆதிபரனாம் அவன் அடித் துணை வணங்கி,
சீதையை விடுத்து, "எளியர் செய் பிழை பொறுக்க" என்று
ஓதல் கடனாம்' என ஒருப்பட உரைத்தான்;
மூதுரை கொள்வோனும், 'அதுவே முறைமை' என்றான்.(52-7)
 
546.என்று அவன் உரைத்திட, இராவணனும், நெஞ்சம்
கன்றி, நயனத்திடை பிறந்தன கடைத் தீ;
'இன்று முடிவுற்றது உலகு' என்று எவரும் அஞ்ச,
குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான்.(52-8)
 
547.நகைத்து, இளவலைக் கடிது நோக்கி, நவில்கின்றான்;
'பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்;
திகைத்தனைகொலாம்; எனது சேவகம் அறிந்தும்,
வகைத்திறம் உரைத்திலை; மதித்திலை;
என்?--எம்பி!(52-10)
 
548.'புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்தன்
வரங்களும் அழிந்திடுவதோ? மதியிலாதாய்!