பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 31

குரங்குக்கே     உரியதோ?     நமக்கில்லையோ?    என்னச்
சொல்லினான்- எனவும் கூறலானான்.
 

மகாபார்சுவன் என வான்மீகி கூறியதை 'மாபெரும் பக்கன்'
எனச் செய்துள்ளார் கம்பர். அவன் - துன்முகன். கைகவித்தல்
- கை அமர்த்தல், கோவம்-கோபம் எதுகைக்கு ஏற்ப கோவம்
என்றாயிற்று.
 

(38)
 

6109.

'முந்தினர், முரண் இலர் சிலவர், மொய் அமர்
நந்தினர்தம்மொடு நனி நடந்ததோ?
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்,
வெந்ததோ, இலங்கையோடு அரக்கர் வெம்மையும்?
 

முந்தினர் முரண் இலர் சிலவர் - போருக்கு முன்னால் சென்ற
சிலர்   வலிமை   இல்லாதவராதலின்; மொய்  அமர்  நந்தினர் -
நெருங்கிய போரிலே கேடடைந்தனர்;   தம்மொடு நனி நடந்ததோ
- அவர்களோடு  அரக்கர் வலிமை  நீங்கியதாகுமோ;   வந்து  ஒரு
குரங்கு-  ஒரு குரங்கு   இங்கு வந்து;   இடுதீயின் வன்மையால்-
நகருக்கு   வைத்த   தீயின்   கொடுமையால்;   இலங்கையோடு -
இலங்கை மாநகரத்துடனே;  அரக்கர்  வெம்மையும் வெந்ததோ-
அரக்கர்களின் வலிமையும் வெந்து ஒழிந்ததோ?
 

நந்தல்-கேடுறுதல். 
 

(39)
 

6110.

'மானுடர் ஏவுவார்; குரங்கு வந்து, இவ் ஊர்-
தான் எரி மடுப்பது; நிருதர் தானையே,
ஆனவர் அது குறித்து அழுங்குவார்எனின்,
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ?
 

மானுடர் ஏவுவார்- மானிடர்கள் குரங்கை ஏவி விடுவார்கள்;
குரங்கு வந்து-  அந்தக் குரங்கு இங்கு வந்து;    இவ்வூர்தான்
எரி மடுப்பது-  இந்த ஊருக்குத் தான் தீயை வைப்பது;  நிருதர்
தானையே ஆனவர் - அதற்கு அசுரப்படையாய் இருப்பவர்கள்;
அது குறித்து அழுங்குவார் எனின் - அதைப் பற்றி நினைத்து
வருந்துபவர்  என்றால்;   மேல்   நிகழ்தக்கன-    இனிமேல்
நிகழத்தக்கதா   யிருப்பதை;   விளம்ப  வேண்டுமோ -  நான்
விரித்துக் கூற வேண்டுமோ?
 

(40)
 

6111.

'நின்று நின்று, இவை சில விளம்ப நேர்கிலென்;
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக்