பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 985

தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ, யான்
என்
சிரம்கொடு வணங்குவதும், மானுடன் திறத்தோ?(52-10)
 
549.'பகுத்த புவனத் தொகை எனப் பகர் பரப்பும்,
மிகுத்த திறல் வானவரும், வேத முதல் யாவும்,
வகுத்து, அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும், எனக்கு அழிவும்
உண்டோ?(52-11)
 
550.'நிறம்தனில் மறம் தொலைய, நீ துயில் விரும்பி,
துறந்தனை, அருஞ் சமரம்; ஆதல், இவை
சொன்னாய்;
இறந்துபட வந்திடினும், இப் பிறவிதன்னில்
மறந்தும் உளதோ, சனகன் மங்கையை விடுத்தல்?'(52-12)
 
551.எனக் கதம் எழுந்து அவன் உரைக்க, இளையோனும்,
நினைத்தனன், மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல;
'சினத்தொடும் மறுத்த இகழ்வு செய்தனன்; இது
ஊழின்
வினைத் திறம்; எவர்க்கும் அது செல்வது அரிது
அன்றே!'(52-13)
 
552.கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலைகண்டே,
'பொறுத்தருள் புகன்ற பிழை' என்று அடி வணங்கி,
உறுத்தல் செய் கும்பகருணத் திறலினோனும்,
'மறுத்தும் ஒரு வாய்மை இது கேள்' என
உரைத்தான்:(52-14)
 
553.'ஏது இல் கருமச் செயல் துணிந்திடுதல் எண்ணி,
தீதொடு துணிந்து, பினும் எண்ணுதல் சிறப்போ?
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன்? ஐயா!
போதியது நம் அரசு, பொன்ற வரு காலம்.(52-15)