554. | என, அவன் அடித் துணை இறைஞ்சி, வாய் | |
| புதைத்து, | |
| இனிய சித்திரம் என ஏங்கி நின்று, தான் | |
| நனை மலர்க் கண்கள் நீர் சொரிய, நல் நெறி | |
| வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்: | (74-1) |
|
555. | 'சானகி, உலகு உயிர் எவைக்கும் தாய் எனல் | |
| ஆனவள், கற்பினால் எரிந்தது அல்லது, | |
| கோ நகர் முழுவதும் நினது கொற்றமும், | |
| வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?' | (74-2) |
|
556. | 'ஈசன்தன்வயின் வரம் கொளும்முன்னம், யான் | |
| அவனை | |
| வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற | |
| எடுத்தேன்; | |
| ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து | |
| ஊன்றக் | |
| கூசி, என் வலி குறைந்திலென், பாதலத்து | |
| அமர்ந்தேன்; | (116-1) |
|
557. | 'அமர்ந்து, நீங்குதற்கு அருமை கண்டு, "அவன் பதம் | |
| அகத்தே | |
| சுமந்து, நீ தவம் புரிக!" எனச் சுக்கிரன் உரைப்ப, | |
| தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்திதிடத் | |
| தருக்கி | |
| நிமிர்ந்து நின்றனென், நெடும் பகல் அருந் தவ | |
| நிலையின் | (116-2) |
|
558. | நின்று பல் பகல் கழிந்திட, நிமலன் நெஞ்சு உருகி, | |
| "நன்று, நன்று!" என நயந்து, எனை வரும்படி | |
| அழைத்து, | |
| "ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச் | |
| சென்று வாழுதி எனத் தந்த வரம் சிதைந்திடுமோ? | (116-3) |