பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 987

559.'கார்த்தவீரியன், வாலி என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை; முதல்
நாள்
சீர்த்த நண்பினர் ஆயபின், சிவன் படை உவர்மேல்
கோத்து, வெஞ் சமம் புரிந்திலென், எனது உளம்
கூசி.(116-4)
 
560.'இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என்? இவ் வரம்
எனக்குத்
தந்த தேவனுக்குஆயினும் என் வலி தவிர்த்துச்
சிந்த ஒண்ணுமோ? மானிடர்திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய்; இது வாய்மையோ?--
மறவோய்!(116-5)
 
561.'ஆயது ஆக, மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையுஞ் செறுத்து,
அற நூறி,
தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக்
காய்வென்' என்று தன் கண் சிவந்து இனையன
கழறும்.(116-6)
 
3. இரணியன் வதைப் படலம்
 
562.'ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய்,
தாது உலாவிய தொடைப் புயத்து இரணியன்
தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன்; அவன் அருந்
தவத்துக்கு
ஏது வேறு இல்லை; யார் அவன்போல் தவம்
இழைத்தார்?
 

(இப் படலத்தின் தொடக்கச் செய்யுளாக, 'வேதம் கண்ணிய'
எனத் தொடங்கும் பாடலின் முன்னர். அமைந்துள்ளது)

 

563.'இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர்
பொருளோ?
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள
இந்திரரும்