| அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும், | |
| வந்து, இவன் பதம் முறை முறை வணங்கிட | |
| வாழ்ந்தான். | (2-1) |
|
564. | 'திருமகட்கு இறை உலகினும், சேண்படு புரம் மூன்று | |
| எரிபடுத்திய ஈசன்தன் பொருப்பினும், ஏகி, | |
| சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது, ஆங்கு | |
| "இரணியாய நம!" என்று கொண்டு ஏத்தல் | |
| கேட்டிருக்கும். | (5-1) |
|
565. | ' "ஓம் அரியாய நம!" என ஒழிவுறாது ஓதும் | |
| நாம நான் மறை விடுத்து அவன்தனக்கு உள்ள | |
| நாமம், | |
| காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர்- | |
| ஆம் அது ஓதுகில், அவன் தனக்கு ஒப்பவர் யாரோ? | (9-1) |
|
566. | ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அருந் தவப் | |
| பெருமை | |
| ஏலுமோ, எமக்கு இயம்பிட? இறைவ! மற்று அவன் | |
| பேர் | |
| மூல மா மறை இது என, மூஉலகு உள்ளோர் | |
| தாலமே மொழிந்திட்டது சான்று எனத் தகுமால். | (10-1) |
|
567. | 'குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின் | |
| நுனிக்கும் வானவர் முதலிய உயிர்த் தொகை | |
| நோக்கில், | |
| அனைத்தும் அன்னவன் ஏவலைத் தலைக்கொண்டு, | |
| அங்கு அவன் பேர் | |
| நினைத்து வாழ்த்திட, மூவர்போல் ஒரு தனி | |
| நின்றான். | (18-1) |
|
568. | 'அன்னவன், புகழ், சீலம், நல் அறம், தனி மெய்ம்மை, | |
| உன்னும் நான் மறையோடு அருள் நீதியும் | |
| பொறையும் | |