பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 989

இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என
உவந்தே,
மன்னுயிர்த் தொகை மகிழ்ந்திட, ஒரு தனி
வாழ்ந்தான்(19-1)
 
569.'நடுங்கி அந்தணன், நாப் புலர்ந்து அரும் புலன்
ஐந்தும்
ஒடுங்கி, உள்ளுயிர் சோர்ந்து, உடல் பதைத்து, உளம்
வெருவி,
"அடங்கும், இன்று நம் வாழ்வு" என அயர்ந்து
ஒருபடியாய்ப்
பிடுங்கும் மெல் உரை, புதல்வனுக்கு இனையன
பேசும்.(23-1)
 
570.'என்று, அவ் வேதியன் இவை இவை இயம்பலும், 
இது கேட்டு,
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும்,
"உரவோய்!
நன்று நீ எனக்கு உரைத்தது?" என்று, இன் நகை
புரிந்து, ஆங்கு,
"இன்று கேள் இதின் உறுதி" என்று எடுத்து இவை
உரைப்பான்: (24-1)
 
571.'என்னும் வாசகம் கேட்டலும், எழுந்து நின்று,
இறைவன்
பொன்னின் வார் கழல் பணிந்து, வாய் புதைத்து,
அரும் புதல்வன்,
"மன்னர் மன்ன! யான் பழுது ஒன்றும்
உரைத்திலென்; மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென்;கேள்"
என உரைப்பான்.(39-1)
 
572.'அழிவு இல் வச்சிர யாக்கை என் அருந் தவத்து
அடைந்தேன்;
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழியத்