| தெளிவு பெற்று, இறை பூண்டுளேன்; யான் அலால் தெய்வம், | |
| மொழி இல் மூடரும், வேறு உளது ஆம் என்று | |
| மொழியார். | (55-1) |
|
573. | 'உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை, பார் | |
| அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல்போல், | |
| பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி, வேறு | |
| அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர், சீரியோர். | (67-1) |
|
574. | 'நான்முகத்து ஒருவனும், நாரி பாகனும், | |
| தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத்- | |
| தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய், | |
| ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான். | (67-2) |
|
575. | 'வையமேல் இனி வரும் பகை உள எனின், | |
| வருவது ஒன்று என்றாலும், | |
| "உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென்" | |
| என்று என் முன் உரைசெய்தாய்; | |
| செய்ய வேண்டுவது என் இனி? நின் உயிர் | |
| செகுக்குவென்; சிறப்பு இல்லாப் | |
| பொய்யிலாளனைப் பொருந்திய பெரும் பகை | |
| போய பின், புகழ் ஐயா! | (79-1) |
|
576. | ' "இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர்மேல் ஏற்றிப் | |
| புவனம் தன்னிலே நூக்கும்" என்று அவுணர் கோன் | |
| புகல, | |
| புவனம் உண்டவன் கழல் இணைப் புண்ணியன் | |
| தன்னைப் | |
| பவனன்தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார். | (98-1) |
|
577. | 'உற்று எழுந்தனர், மாளிகை உம்பர்மேல் கொண்டு, | |
| கற்று அறிந்தவர்க்கு அரசனைக் கடுந் திறல் | |
| அவுணர் | |