இக்காலத்தில் பெருந்தலைவர்கள், போர்த் தளபதிகள் முதலானோர் இறந்தால் அவர்களுடைய சடலம் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு இடுகாடுவரை எடுத்துச் செல்லப்படும் என்பதை நாம் அறிவோம். எகிப்திய நாட்டில் பரோக்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் இறந்தால், பிரமிடுகளின் உள்ளே சடலங்களை வைத்து மூடிவிடுவார்கள். இந்தச் சடங்கில் முக்கியமான பகுதி என்னவென்றால், அந்த அரசர்கள் பயன்படுத்திய அத்தனை சாமான்களும், கொடி உள்பட, அவர்கள் சடலத்தின் பக்கத்தில் வைக்கப்படும். ஆகவே, இத்தகைய பழக்கம் மிகப் பழமையானது என்பதை அறிகிறோம். கம்பனும் இதனை அறிந்து தன் பாடலில் இந்நிகழ்ச்சியைப் பேசுகிறான். | "கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து, உற்ற ஈம விதியின் உடம்படீஇ, சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர, மற்ற வீரன் விதியின் வழங்கினான்" | (யுத்தகாண்டம்-மிகைப்பாடல்-1024) | போர் என்று வந்துவிட்டால் தர்ம, நியாயங்கள் பார்க்க அங்கு இடமில்லை. எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதுதான் குறிக்கோளே தவிர, 'இது முறையா? இது அறமா?' என்று பார்க்கத் தேவையில்லை என்ற கருத்து இன்றும் உலக முழுவதும் பரவி உள்ளது. ஆனால், தமிழர்களைப் பொறுத்த மட்டில் போராயினும், ஆட்சியாயினும் அறத்தின் அடிப்படையிலேயே நடைபெறவேண்டும் என்று கருதினர். புறநானூற்றில் உள்ள, | "ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்......." | (புறம்-9) | என்ற புறப்பாடல் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. ஆனால், இருதரப்பினரிடைப் போர் நிகழ்ந்தால் இருவருமே அறவழியில் நின்று போரிடுவர் எனக் கூறமுடியாது. இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் இடையே நடைபெறும் போரில், கம்பன் இக்கருத்தை வலியுறுத்துகிறான். இலக்குவனிடம் மாயப்போர் பல செய்தும் பெரும் துயரத்திற்கு ஒரே காரணம் இலக்குவன் அறவழி பிறழ்ந்து போர் செய்யவில்லை என்பதுதான். "இலக்குவன் தன்பால் உள்ள முதலவன் படையாகிய பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டான். அவன் அவ்வாறு |
|
|
|