உளர் எனக் கோடலும் கொண்டாய் - உள்ளனர் என்று எண்ணிக் கொண்டாய். |
மாற்றம் - சொற்கள் ஒருமுறை பெறவிலை - பெறவில்லை. கல்லுதல்-தோண்டுதல் (கிளர்தல்) விண்-விண்ணுலகம். கிளை - உறவினர். கொல்லும் மாற்றலர் என்பது கொல்லும் ஆற்றலர் எனவும் பொருள் கொள்ள நின்றது. |
(104) |
6175. | 'தேவரின் பெற்ற வரத்தினது என் பெருஞ் |
| செருக்கேல், |
| மூவரில் பெற்றம் உடையவன்தன்னொடும், முழுதும் |
| காவலின் பெற்ற திகிரியான்தன்னொடும், கடந்தது |
| ஏவரின் பெற்ற வரத்தினால் ? இயம்புதி- |
| இளையோய் ! |
|
இளையோய் - இளையவனே ! தேவரின் பெற்ற வரத்தினது - தேவர்களிடம் நான் பெற்ற வரத்தினால் அமைந்தது; என் பெரும் செருக்கேல் - எனது பெரிய வலிமை என்பாயாயீன்; மூவரில் - முதற் கடவுள் மூவரில்;பெற்றம் உடையவன் தன்னொடும் - காளையை ஊர்தியாக உடைய சிவபிரானுடனும்; முழுதும் காவலின் பெற்ற - உலகம் முழுவதையும் காக்கும் திறம்பெற்ற; திகிரியான் தன்னொடும் - சக்கரப் படையை உடைய திருமாலுடனும்;கடந்தது - (செய்த போரிலே) வெற்றி பெற்றது; ஏவரின் பெற்ற வரத்தினால் - ஏவரிடம் பெற்ற வரத்தால்;இயம்புதி - கூறுவாயாக. |
வயதில் மாத்திரமல்லாது அறிவிலும் இளையவன் என்பது தோன்ற 'இளையோய்' என அழைத்தான். முதற்கடவுளர் மூவர் அரன் அரி அயன் என்போர். பெற்றம்-காளை. "காவலின் பெற்ற திகிரி என்றது 'சக்கரப்படை' உலகம் காக்க வல்லது என்பதை உணர்த்தும். கடத்தல் என்றது எதிர்நின்று போர்செய்து வெல்லுதல் (புறநா.8) |
(105) |
6176. | ' "நந்தி சாபத்தின் நமை அடும், குரங்கு" எனின், |
| நம்பால் |
| வந்த சாபங்கள் எனைப் பல; அவை செய்த வலி |
| என்? |
| இந்திராதியர், சித்தர்கள், இயக்கர், நம் இறுதி |
| சிந்தியாதவர் யார் ? அவை நம்மை என் செய்த ? |