நந்தி சாபத்தின்- நந்திதேவன் கொடுத்த சாபத்தால்; நமை அடும் குரங்கு எனின் - குரங்குகள் நம்மைக் கொல்லும் என்றால்;நம்பால் வந்த சாபங்கள் எனைப்பல - நம்மை வந்தடைந்த சாபங்கள் எத்தனை எத்தனை ?அவை செய்த வலி என் - அவை விளைவித்த துன்பம் என்ன; இந்திராதியர் - இந்திரன் முதலான தேவர்களும்; சித்தர்கள், இயக்கர் - சித்தர்களும் இயக்கர்களும் ஆகியோரில்; நம் இறுதி சிந்தியாதவர் யார் ? - நமது அழிவை நினைக்காதவர் எவருண்டு ?அவை நம்மை என் செய்த - அவை எல்லாம் நம்மை என்ன செய்துவிட்டன; |
தனது வெற்றிக்கும், வலிமைக்கும் தேவர் தந்த வரம் காரணமல்ல என்றவன், அவர்களது சாபமும் தன்னை எதுவும் செய்யஇயலாது என்றான். |
(106) |
6177. | 'அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் |
| அறியேன் ; |
| இரங்கி யான் நிற்ப, என் வலி அவன்வயின் எய்த |
| வரம் கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும் வேறு |
| உள்ள |
| குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் |
| கோடி ? |
|
அரங்கில் ஆடுவார்க்கு - அம்பலத்திலே நடனமாடுகின்ற சிவபிரானுக்கு; அன்பு பூண்டு உடை வரம் அறியேன்- அன்பு கொண்டு அதனால் பெற்ற வரபலமுடையவன் என்பதனை அறியாதவனாய்; இரங்கியான் நிற்ப - வாலியுடன் செய்த போரில் மனம் கலங்கி நான்நிற்க; என் வலி அவன் வயின் எய்த - எனது வலிமை அவனிடம் செல்ல; வரம் கொள் வாலிபால் தோற்றனென் - எதிர்த்தவர் பலம் தனக்கு வரவேண்டும் என்று வரம் பெற்றிருந்த வாலியிடம் நான் தோல்வியுற்றேன்; மற்றும் வேறுள குரங்கெலாம் - இதனால் மற்றுமுள்ள குரங்குகள் எல்லாமே; எனைவெல்லும் என்று எங்ஙனம் கோடி- என்னை வென்று விடும் என்று எப்படிக் கொள்ளுவாய்? |
வலி-பலம். வயின்-இடம். இராவணன் வாலிபால் தோற்று, வாலால், கட்டுண்ட செய்தி உத்தரகாண்டத்தில் உள்ளது. |
(107) |