| இராவணன் மந்திரப் படலம் | 73 |
ஊனம் - குறைபாடு. மிதிலையில் வில்லை ஒடித்ததும், மராமரத்தை அம்பெய்து துளைத்ததும் இராமன் செய்த அரிய செயல்கள் எனப் பிறர் புகழ்ந்து கூற, அதனை இகழ்ந்து ஊனவில், ஓட்டைமரம் என இராவணன் பேசுவது அவனது வெறுப்பைக் காட்டுவதாகும். என்னால் மனைவியை இழந்து, உயிர் சுமந்து திரியும் இராமனை உன்னை அன்றி மதித்தவர் வேறு யார் இருக்கிறார்கள் என்றான். | (109) | வீடணன் மேலும் உறுதி மொழி உரைத்தல் | 6180. | என்று தன் உரை இழித்து, 'நீ உணர்விலி என்னா, | | 'நன்று, போதும் நாம்; எழுக !' எனும் அரக்கனை | | நணுகா, | | 'ஒன்று கேள், இனம் உறுதி' என்று, அன்பினன், | | ஒழியான், | | துன்று தாரவன், பின்னரும், இனையன சொன்னான்: | | என்று தன் உரை இழித்து - என்றெல்லாம் தான் கூறிய நல்லுரைகளைப் பழித்து; நீ 'உணர்விலி' என்னா- நீ அறிவில்லாதவன் என்று வீடணனைப் பழித்து விட்டு; நன்று போதும் நாம் எழுக - அங்கு திரண்டு நின்ற அசுரர்களைப் பார்த்து நல்லது நாம் போரிடச் செல்வோம்; எனும் அரக்கனை நணுகா - என்று கூறிய இராவணனை நெருங்கி நின்று; ஒன்று கேள் இனம் உறுதி என்று - இன்னும் நான் கூறும் உறுதி ஒன்றினைக் கேள் என்று; அன்பினன் - அன்பு மிக்கவனாய்; ஒழியான் - இராவணனை விட்டு நீங்காதவனாய்; துன்றுதாரவன் - நெருங்கிய மலர்மாலை அணிந்த வீடணன்; பின்னரும் இனையன சொன்னான் - மறுபடியும் பின்வருமாறு கூறினான். | உணர்விலி-அறிவில்லாதவன். போதும்-செல்வோம். என்னா- என்று நணுகா-நணுகி இரண்டும் செய்யா என்ற வாய்பாட்டு வினைஎச்சம். 'அன்பினன் ஒழியான்' என்ற தொடர்க்கு இவ்வளவு கேவலப்படுத்தப்பட்ட பின்னும் தமையனிடத்து அன்பு நீங்காதவனாய் என்று பொருள் கொள்ளலாம். | (110) | 6181. | 'தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித் | | தலைவன், | | அன்ன மானுடன் ஆகி வந்து, அவதரித்து | | அமைந்தான், |
|
|
|