பக்கம் எண் :

74யுத்த காண்டம் 

சொன்ன நம்பொருட்டு, உம்பர்தம் சூழ்ச்சியின்

துணிவால்;

இன்னம் ஏகுதி போலும்' என்று அடி தொழுது

இரந்தான்.

 

தன்னின் முன்னிய பொருள் இலா - தன்னை விடச்சிறந்த
பொருள்    வேறொன்றில்லாத; ஒரு தனித்தலைவன் - ஒப்பற்ற
தலைவனாகிய திருமாலே; உம்பர் தம் சூழ்ச்சியின் துணிவால்
-   தேவர்களின்   ஆலோசனை   முடிவின்படி;   சொன்னநம்
பொருட்டு
-  அந்தத்  தேவர்களெல்லாம் தீயவர் என்று கூறிய
நம்மை   அழிக்கும் பொருட்டு; அன்ன மானுடன் ஆகி வந்து
- அந்த   மானிடனான    இராமனாக    வந்து;   அவதரித்து
அமைந்தான்
-  அவதாரம்   செய்து  நம்முடன் போர் செய்ய
அமைந்தான்;  இன்னம் ஏகுதி போலும் -  இதனைத் தெரிந்த
பின்னும்  போருக்குச் செல்வாய் போலும்;என்று அடி தொழுது
இரந்தான் 
- என்று இராவணன் அடிகளில் வணங்கி யாசித்துக்
கூறினான்.
 

முன்னிய-சிறந்த. ஒருதனித்தலைவன்-ஒப்பற்ற தலைவன்.
 

(111)
 

இராவணன் மறுமொழி
 

6182.

அச் சொல் கேட்டு, 'அவன் ஆழியான் என்றனை ;

ஆயின்,

கொச்சைத் துன்மதி எத்தனை போரிடைக்

குறைந்தான் ?

இச்சைக்கு ஏற்றன, யான் செய்த இத்தனை காலம்,

முச்சு அற்றான்கொல், அம் முழுமுதலோன் ?' என

முனிந்தான்.

 

அச்சொல்  கேட்டு- வீடணன் கூறிய அந்தச் சொற்களைக்
கேட்டு;   அவன் ஆழியான் என்றனை   -  அந்த இராமனை
சக்கரப்படையை உடைய திருமாலின் அவதாரம் என்றாய்; ஆயின்
கொச்சைத் துன்மதி
- அப்படியானால் இழிந்த துர்புத்தி உடைய
அவன்; எத்தனை போரிடைக் குறைந்தான்- என்னுடன் செய்த
எத்தனை போர்களிலே தோற்றான்.இச்சைக்கு ஏற்றன - எனது
விருப்பத்துக்கேற்றவைகளையே;யான் செய்த இத்தனைகாலம்-
நான்  செய்து கொண்டிருந்த  இத்தனை   காலமும்;   அம்முழு
முதலோன் 
-   நீ முழு முதல்வன் எனக்கூறும் அவன்;முச்சு
அற்றான்