கொல் - மூச்சற்றவனாக இருந்தான் போலும்; என முனிந்தான் - என்று கூறி இராவணன் வீடணனைச் சினந்தான். |
ஆழியான் - சக்கரப்படையுடைய திருமால். கொச்சை-இழிந்த. துன்மதி-கெட்டபுத்தி. குறைந்தான்-தோல்வியுற்றான். இச்சை-விருப்பம். அற்றான் - இறந்தனனோ என்பது பொருள். முச்சு: மூச்சு என்பதன் குறுக்கல் விகாரம். |
(112) |
6183. | 'இந்திரன்தனை இருஞ் சிறை இட்ட நாள், |
| இமையோர் |
| தந்தி கோடு இறத் தகர்த்த நாள், தன்னை யான் |
| முன்னம் |
| வந்த போர்தொறும் துரந்த நாள், வானவர் உலகைச் |
| சிந்த வென்ற நாள், சிறியன்கொல், நீ சொன்ன |
| தேவன்? |
|
இந்திரன்தனை இருஞ்சிறை இட்டநாள் - நான் தேவர்களுக்குத் தலைவனான இந்திரனைப் பெரியதொரு சிறையிலே அடைத்து வைத்த காலத்திலும்; இமையோர் தந்திகோடு இறதகர்த்த நாள் - அந்தத் தேவர்களது யானையான ஐராவதத்தின் தந்தங்கள் முறியும்படி தகர்த்த காலத்திலும்; தன்னை யான் முன்னம் - அந்தத் திருமாலை யான் இதற்கு முன்பு; வந்த போர் தொறும் துரந்த நாள் - வந்து நேர்ந்த போர்களில் எல்லாம் தோற்று ஓடுமாறு துரத்திய போதும்; வானவர் உலகைச்சிந்த வென்ற நாள் - தேவர் உலகத்தை அவர்கள் சிதறி ஓடுமாறு வென்ற நாளிலும்; நீ சொன்ன தேவன் - நீ கூறிய அந்தத் திருமாலாகிய தேவன்;சிறியன் கொல் - சிறியவனாய் இருந்தான் போலும். |
இருஞ்சிறை-பெரிய சிறை. தந்தி-யானை (இங்கு ஐராவதம் என்ற வெள்ளை யானை), கோடு-தந்தம். |
(113) |
6184. | 'சிவனும், நான்முகத்து ஒருவனும், திரு நெடு மாலாம் |
| அவனும், மற்று உள அமரரும், உடன் உறைந்து |
| அடங்க, |
| புவனம் மூன்றும் நான் ஆண்டுளது, ஆண்ட அப் |
| பொரு இல் |
| உவன் இலாமையினோ ? வலி ஒதுங்கியோ ? |
| உரையாய் ! |