சிவனும் நான்முகத்து ஒருவனும் - சிவபெருமானும், நான்கு முகங்களை உடைய ஒருவனான பிரமனும்;திருநெடுமாலாம் அவனும் -திருமகள் நாயகனான திருமாலாகிய அவனும்; மற்று உள அமரரும் - மற்றும் உள்ள தேவர்கள் அனைவரும்;உடன் உறைந்து அடங்க - எனது ஆட்சியில் ஒரு சேர அடங்கி இருக்க; புவனம் மூன்றும் நான் ஆண்டுளது - மூன்று உலகங்களையும் நான் ஆட்சி செய்து வந்துள்ளது; ஆண்ட அப்பொரு இல் உவன் - மூவுலகத்தையும் ஆண்ட அந்த ஒப்பில்லாதவனான அவன்;இலாமையினோ - இல்லாமையினாலா; (அல்லது) வலி ஒதுங்கியோ - எனது வலிமைக்கு முன் நிற்கமாட்டாது ஒதுங்கி இருந்து விட்டதாலோ? உரையாய் - நீ கூறுவாயாக. |
'ஆண்ட அப்பொருவில் வில்' எனப் பிரித்து கையாண்ட அந்தப் போரிட வல்ல வில்லை (சார்ங்கம்) உடையவன் எனக் கூறினும் பொருந்தும். உவன்: என்பது சுட்டு. (இடை) திருநெடுமால் என்ற சிறப்புக்குரிய பெயரை இராவணன் எள்ளுதற் குறிப்போடு சொல்லினான். |
(114) |
6185. | 'ஆயிரம் பெருந் தோள்களும், அத் துணைத் |
| தலையும், |
| மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும், |
| தீய, "சாலவும் சிறிது" என நினைந்து, நாம் தின்னும் |
| ஓயும் மானுட உருவு கொண்டனன்கொலாம்- |
| உரவோன் ? |
|
ஆயிரம் பெருந்தோள்களும் - ஆயிரம் பெரும்தோள்களையும்; அத்துணைத்தலையும்- அந்த அளவினதான தலைகளையும்;மாஇரும் புவி - பெரிய இந்த உலகம் முழுவதையும்; உள்ளடி அடக்குறும் வடிவும் - தனது ஓரடிக்குள்ளே அடக்கும் பெரியதொரு வடிவமும்; தீய சாலவும் சிறிது என நினைந்து - தீமை தருவன, மிகவும் சிறியவை என்று நினைத்து; உரவோன் - நீ சிறப்பித்துச் சொல்லும் அந்த வலியவன்; நாம் தின்னும் ஓயும் மானுட உருவு - நாம் தின்னத்தகுந்த வலிமையற்ற மனித வடிவத்தை; கொண்டனன் கொல் - கொண்டானோ? |
திருமால் ஆயிரம் தோள்களும், ஆயிரம் தலைகளும், ஆயிரம் கைகளும், ஆயிரம் கண்களும் உடையவர் என்பதை "காலாயிரம் முடியாயிரம், ஆயிரம் கை பரப்பி" என்ற அட்டப்பிரபந்தப் பாடலாலும் புருஷ சூக்கத்தாலும் அறியலாம். உலகத்தை ஓரடிக்கீழ் ஒடுக்கிய பெருவடிவம் திருவிக்கிரம் அவதாரம். அத்தகைய பேருருவம் |