பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 77

சிறியது - தீயது என நினைத்து,  நாம்  தின்னத்தக்க - வலிமையற்ற
மனித   வடிவைக்   கொண்டவனையோ-நம்மை எல்லாம் கொல்ல
வல்ல  வலிமையுடையவன்  என்று   கூறினாய்   என  வீடணனை
வெகுண்டும், இராமபிரானை இகழ்ந்தும் கூறினான்.
 

(115)
 

6186.

'பித்தன் ஆகிய ஈசனும் அரியும், என் பெயர் கேட்டு,

எய்த்த சிந்தையர், ஏகுழி ஏகுழி எல்லாம்,

கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும், முதுகில்

தைத்த வாளிகள் நின்று உள, குன்றின் வீழ்

தடித்தின்.*

 

பித்தன்   ஆகிய   ஈசனும்   அரியும்  - பித்தனாகிய
சிவபெருமானும்,  திருமாலும்;என் பெயர் கேட்டு -  எனது
பெயரைக் கேட்டவுடன்;   எய்த்த சிந்தையர் - (அச்சத்தால்)
சோர்ந்த   மனத்தினராய்; ஏகுழி   ஏகுழி எல்லாம் - அவர்
சென்ற   சென்ற இடமெல்லாம்;  கைத்த ஏற்றினும் - சிவன்
செலுத்திச்  சென்ற   காளை   மீதும்;கடவிய புள்ளினும் -
திருமால்  ஏறிச் சென்ற  கருடன்  மீதும்;   முதுகில் தைத்த
வாளிகள் நின்று 
- நான் எய்த பாணங்கள் முதுகில் தைத்து
நின்ற வடுக்கள்; குன்றின் வீழ் தடித்தின் உள - மலைமீது
விழுந்த இடிபோல் உள்ளன அன்றோ?
 

எய்த்த-சோர்ந்த. ஏகுழி-செல்லுமிடம். கைத்த ஏறு-செலுத்திய
காளை. உகைத்த என்ற சொல் முதல் (எழுத்து) குறைந்து கைத்து
என நின்றது.  கடவிய   புள்-செலுத்திய  கருடன்.  தடித்து-இடி.
வாளிகள். இங்கு அம்புகளால் ஆன வடுக்களைக் குறித்தது. இடி
விழுந்த மலையில் சிதைந்த இடிபாடுகள்  காணப்படுவன போல
அம்புபட்ட வடுக்கள் காணப்பட்டன என்பது கருத்து.
 

(116)
 

6187.

'வெஞ் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா;

இஞ்சி மா நகர் இடம் உடைத்து, ஈண்டு இனிது

இருத்தி ;

அஞ்சல் அஞ்சல் !' என்று, அருகு இருந்தவர் முகம்

நோக்கி,

நஞ்சின் வெய்யவன் கை எறிந்து, உரும் என

நக்கான்.

 

வெஞ்சினம் தரு போரின்- கொடிய சினத்தை உண்டாக்கும்
போரிலே   பங்குகொள்ள;   எம்முடன்  எழ  வேண்டா -  நீ
எங்களோடு புறப்படவேண்டா; இஞ்சி மாநகர் இடம் உடைத்து
- மதில் சூழ்ந்த மாநகராகிய இலங்கையில் நிறைய இடமிருக்கிறது;
ஈண்டு இனிது