இருத்தி - இங்கு நீ இனிதே தங்கி இருப்பாயாக; அஞ்சல் அஞ்சல் என்று - அஞ்சாதே, அஞ்சாதே என்று கூறி ;நஞ்சின் வெய்யவன் - கொடிய விடத்தினும் கொடியவனான இராவணன்; அருகு இருந்தவர் முகம் நோக்கி - அருகில் இருந்த அமைச்சர் முதலானவர்களின் முகத்தைப் பார்த்து;கை எறிந்து - கையோடு கையைக் கொட்டி; உரும் என நக்கான் - இடி இடித்தது போலச் சிரித்தான். |
அஞ்சல்! அஞ்சல்! என்ற அடுக்குத் தொடர் எள்ளுதற் குறிப்புடையது. 'மாநகர் இடம் உடைத்து' போதுமான அளவு நிறைய இடம் இருக்கிறது என்றது ஏளனமாகக் கூறியதாம். |
(117) |
வீடணன் மறுபடியும் கூறுதல் |
6188. | பின்னும் வீடணன், 'ஐய ! நின் தரம் அலாப் |
| பெரியோர், |
| முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடும் |
| முடிந்தார்; |
| இன்னம் உண்டு, யான் இயம்புவது ; |
| இரணியன்என்பான்- |
| தன்னை உள்ளவா கேட்டி' என்று உரைசெயச் |
| சமைந்தான் : |
|
பின்னும் வீடணன் - இராவணன் கூறியதைக் கேட்டபின்பு வீடணன்; ஐய - தலைவனே; நின்தரம் அலாப் பெரியோர் - உன் அளவினர் அல்லாத பெரியோர் பலர்; முன்னை நாள் - மிக முற்பட்ட காலத்திலே; இவன் முனிந்திட - இந்தத் திருமால் கோபம் கொண்ட காரணத்தால்; கிளையொடும் முடிந்தார் - உற்றார் உறவினரோடு அழிந்தார்கள்; இன்னம் உண்டு யான் இயம்புவது - இன்னும் உனக்கு நான் சொல்ல வேண்டிய தொன்றுண்டு;இரணியன் என்பான் தன்னை- இரணியன் என்று சிறப்பித்துக் கூறப்படுபவனது செய்தியை; உள்ளவா கேட்டி- உள்ளபடியே நான் கூறக் கேட்பாயாக; என்று உரை செயச் சமைந்தான் - என்று கூறுவதற்கு அமைந்தான். |
நின்தரம்-உன்னளவு. உன்னைவிட அறிவு ஆற்றல்களில் மேம்பட்ட என்பது கருத்து. உள்ளவா-உள்ளவாறு என்பதன் விகாரம். |
(118) |