இரணியன் இயல்பும் ஏற்றமும் |
6189. | 'வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே |
| ஈந்தான்; |
| போதம் கண்ணிய வரம் எலாம் தரக் கொண்டு |
| போந்தான்; |
| காதும் கண்ணுதல், மலர் அயன், கடைமுறை |
| காணாப் |
| பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான். |
|
வேதம் கண்ணிய பொருள் எலாம் - (இரணியனுக்கு) வேதங்கள் குறித்த எல்லாப் பொருள்களையும்;விரிஞ்சனே ஈந்தான் - பிரமதேவனே (குருவாக) அறிவித்தான்; போதம் கண்ணிய - சிறந்த ஞானத்தால் தான் கருதிய;வரம் எலாம்தர - எல்லா வரங்களையும் அப்பிரமனேதர; கொண்டு போந்தான் - பெற்றுக் கொண்டு வந்தான்;காதும் கண்ணுதல் - உயிர்களை எல்லாம் அழிக்கவல்ல நெற்றிக் கண்ணனாகிய சிவனும்;மலர் அயன் - தாமரை மலரில் உறையும் பிரமனும்; கடைமுறை காணாப் பூதம் - முடிவு காணமுடியாத ஐம்பெரும் பூதங்களும்; கண்ணியவலிஎலாம்- கொண்டுள்ள வலிமை எல்லாம்; ஒரு தனி பொறுத்தான் - தான் ஒருவனே தாங்குவனானான். |
வேதம் கண்ணிய பொருள் - வேதங்களின் உட்பொருள் விரிஞ்சன் - பிரமன். வேதங்களைப் படைத்த வேதாவாகிய பிரம்மாவே இரணியனுக்கு வேத உண்மைகளை அறிவித்தான் என்ற சிறப்பை 'ஏகாரம்' உணர்த்தும். காதும்- அழிக்கும்; சங்கார காரணன் சிவன் என்பதை 'காதும் கண்ணுதல்' என்பது குறித்தது. கடைமுறை - கடைசி எல்லை. சிவன், பிரமன், பூதங்கள் கொண்டுள்ள வலிமையெல்லாம் இரணியன்தான் ஒருவனே பெற்றிருந்தான் என்றார். பொறுத்தல் - தாங்குதல். |
(1) |
6190. | 'எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும், |
| அயனும், |
| கற்றை அம் சடைக் கடவுளும், காத்து, அளித்து, |
| அழிக்கும் |