| ஒற்றை அண்டத்தின் அளவினோ? அதன் புறத்து |
| உலவா |
| மற்றை அண்டத்தும், தன் பெயரே சொல, |
| வாழ்ந்தான். |
|
ஏற்றை நானினும் உளன் எனும் இறைவனும் - எந்நாளும் அழியாது உள்ளவன் என்று கூறத்தக்க இறைவனான திருமாலும்; அயனும் - படைப்புக் கடவுளான பிரமதேவனும்; கற்றை அம் சடைக்கடவுளும் - அழகிய சடைக் கற்றையை உடையசிவனும்; காத்து, அளித்து, அழிக்கும் - முறையே படைத்து, காத்து, அழிக்கின்றதாகிய; ஒற்றை அண்டத்தின் அளவினோ - இந்த ஒரு அண்டத்தின் அளவில் மட்டுமோ?; அதன் புறத்து உலவா - இந்த அண்டத்துக்குப் புறத்திலும் எண்ணற்றனவாக உள்ள; மற்றை அண்டத்தும் - வேறு வேறு அண்டங்களிலும்;தன்பெயரே சொல- (வாழ்பவரெல்லாம்) தனது பெயர் ஒன்றினையே (புகழ்ந்து) பேசுமாறு; வாழ்ந்தான் - இரணியன் வாழ்ந்து வந்தான். |
எற்றை நாளினும் - எந்த ஊழிக் காலத்தும் என்பது பொருள். இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் என, திருமாலைச் சுட்டி நின்றது (விஷ்ணு என்ற வடமொழிச் சொல் இதே பொருளை உடையது) |
(2) |
6191. | 'பாழி வன் தடந் திசை சுமந்து ஓங்கிய பணைக் |
| கைப் |
| பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு |
| பொருத்தும்; |
| ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி |
| ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும். |
|
பாழி வன் தடந்திசை - அகன்ற, வலிய, பெரியதிசைகளை; சுமந்து ஓங்கிய பணைக்கை - சுமந்து உயர்ந்த பருத்த தும்பிக்கைகளில் எல்லாம்; பூழை வன் கரி - உள்துளை உடைய வன்மை மிகுந்த திக்குயானைகளில்; இரண்டு இருகைக் கொடு பொருத்தும்- இரண்டினைத் தனது இரண்டு கைகளிலும் கொண்டு மோத விடுவான்; ஆழம் காணுதற்கு அரியவாய் - ஆழத்தை அளந்தறிய இயலாதனவாகிய;அகன்ற பேர் ஆழி ஏழும் - விசாலமான ஏழு கடல்களையும்; தன் இரு தாள் அளவென - தனது இருபாதங்களின் அளவு உடையன என்னும்படி; கடந்து ஏறும் - கடந்து கரை ஏறுவான். |
(3) |