பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 83

(5)
  

6194.

'சாரும் மானத்தில், சந்திரன் தனிப் பதம் சரிக்கும்;

தேரின் மேலின் நின்று, இரவிதன் பெரும் பதம்

செலுத்தும்;

பேர்வு இல் எண் திசைக் காவலர் கருமமும் பிடிக்கும்;

மேரு மால் வரை உச்சிமேல் அரசு வீற்றிருக்கும்.

 

சாரும் மானத்தில் - சந்திரன் ஏறிச் செல்லும்  விமானத்திலே
(அமர்ந்து);சந்திரன் தனிப்பதம் -  சந்திரனுக்குரிய சிறந்த ஆட்சி
நடத்தி; சரிக்கும் -   உலாவுவான்;   தேரின்   மேல் நின்று -
சூரியனுக்குரிய  தேரின்மீது  நின்று;    இரவிதன்   பெரும்பதம்
செலுத்தும்
- சூரியனுக்குரிய ஆட்சியை நடத்துவான்; பேர்வு இல்
எண்  திசைக் காவலர்
- பெயர்தல் இல்லாத எட்டுத்திசைதிக்குக்
காவலர்களின்; கருமமும் பிடிக்கும் -  தொழிலையும்   ஒருவனே
இயற்றுவான்;  மேரு  மால்  வரை  உச்சிமேல் - பெரிய மேரு
மலையினது  உச்சியின்மேல்;  அரசு வீற்றிருக்கும் - பேரரசனாக
வீற்றிருப்பான்.
 

கருமம் - தொழில், மானம் - விமானம் எண்திசைக் காவலர்
- அட்டதிக்குப்   பாலகர்கள்   (இந்திரன் -  அக்கினி - யமன்
- நிருதி - வருணன் - வாயு - குபேரன் - ஈசானன்)
 

(6)
 

6195.

'நிலனும், நீரும், வெங் கனலொடு காலும் ஆய்,

நிமிர்ந்த

தலனுள் நீடிய அவற்றின் அத் தலைவரை மாற்றி,

உலவும் காற்றொடு கடவுளர் பிறரும்ஆய், உலகின்

வலியும் செய்கையும் வருணன்தன் கருமமும்,

மாற்றும்.

 

நிலனும் நீரும் - மண்ணும், தண்ணீரும்; வெங்கனலொடு -
வெப்பம் மிக்க நெருப்புடனே;காலும் ஆய் -   காற்றும் ஆகி;
நிமிர்ந்த   தலனுள்   நீடிய   அவற்றின் - எங்கும் பரவிய
இவ்வண்டத்திலே நிலைபெற்றுள்ள அவைகளின்; அத்தலைவரை
மாற்றி
-   தலைவர்களாய்   இருப்பவர்களை  மாற்றி;உலவும்
காற்றொடு
- உலாவுகின்ற காற்றுடனே (வாயுதேவன்); கடவுளர்
பிறருமாய்
- மற்ற தெய்வங்களும்தானேயாக;உலகின் வலியும்
செய்கையும்
- உலகத்தின் வலிமையும் அதன் காரியமும்;