வருணன்தன் கருமமும் - வருணனுக்குரிய தொழிலும்;மாற்றும்- (ஆகியவைகளை - ஒருவர் செய்வதை மற்றவர் செய்யுமாறு) மாற்றி விடுவான். |
வெம்மை + கனல் = வெங்கனல் தலன் = தலம் (அண்டம்) நீடிய - நிலைபெற்ற. அவற்றின் - அவ்வைம் பூதங்களின் நிமிர்ந்த - பரவிய. |
(7) |
6196. | 'தாமரைத் தடங் கண்ணினான் பேர்அவை தவிர, |
| நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில, |
| தூம வெங் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த |
| ஓம வேள்வியின், இமையவர் பேறு எலாம் உண்ணும். |
|
தாமரைத்தடங் கண்ணினான் - செந்தாமரை மலர் போன்ற விசாலமான கண்களையுடைய திருமாலின்; பேர் அவை தவிர - திருநாமம் ஒன்றைத்தவிர; உலகங்கள் யாவையும் - எல்லா உலகத்தில் உள்ளவர்களும்; நாமம் தன்னதே நவில - தன்னுடையநாமம் ஒன்றினையே கூற;தூம வெங்கனல் - புகையுடன் கூடிய வெம்மையான யாகத் தீயிலே; அந்தணர் முதலினர் சொரிந்த - அந்தணர், முனிவர் ஆகியோர் பெய்த; ஓம வேள்வியின் - ஓமப் பொருள்களை உடையயாகத்திலே;இமையவர் பேறு எலாம் உண்ணும் - தேவர்களுக்குரிய அவி உணவை எல்லாம்தானே உண்பான். |
தாமரைத்தடம் கண்ணினன் - திருமால். பேர் எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய நம:) என்பது. வேதங்களால் சிறப்பித்துப் பேசப்படும் இத்திரு மந்திரம் மிகப்பழங்காலத்திலிருந்தே தேவர் மக்கள் எல்லோரும் நாளும் ஓதிவந்த பெருமை உடையது. தேவர்களைக் குறித்துச் செய்யப்பட்ட யாகங்களில் சொரிந்த அவியுணவை எல்லாம் தானே நுகர்ந்தான். "அரணியன்றனகல்வேள்வி ஆகுதி செய்புவி அனைத்தும், இரணியன தெனும் வார்த்தை இந்நெடு நாள் கேட்டிலையோ" என்ற இரணியவதைப் பரணி நினைதற்குரியது இமையவர் பேறு - அவி உணவு. |
(8) |
6197. | 'காவல், காட்டுதல், துடைத்தல், என்று இத் தொழில் |
| கடவ |
| மூவரும் அவை முடிக்கிலர், பிடிக்கிலர் முறைமை; |
| ஏவர் மற்றவர்? யோகியர் உறு பதம் இழந்தார்; |
| தேவரும், அவன் தாள் அலால் அருச்சனை செய்யார். |