காவல், காட்டுதல், துடைத்தல் என்று- காத்தல், படைத்தல், அழித்தல் என்று கூறப்படும்; இத்தொழில் கடவ மூவரும் - இந்த முத் தொழிலைப் புரிந்து வந்த பிரமன், திருமால், சிவன் ஆகிய மூவரும்; அவை முடிக்கிலர் - தமக்குரிய அத்தொழில்களைச் செய்து முடிக்க மாட்டாதவராய்; முறைமை பிடிக்கிலர்- தமக்குரிய முறையைக் கடைப்பிடிக்காதவர் ஆயினர்; ஏவர் மற்றவர் - (மும்மூர்த்திகளின் நிலையே இது வானால்) மற்றவர் எவர் அவனைவெல்லவல்லார்; யோகியர் உறுபதம் இழந்தார் - யோகிகள் எல்லோரும் கூட தமது பதவிகளை இழந்தனர்; தேவரும் அவன்தாள் அலால் - தேவர்கள் கூட, அவனுடைய பாதங்களைத் தவிர; அர்ச்சனை செய்யார் - வேறு எவரையும் பூசிக்க மாட்டார். |