தொட்டுத் தோன்றாது உறையும் தெய்வமும் இரணியனுக்கு அஞ்சி, அவனைப் புகழ்ந்து துதிக்கும் என்பது கருத்து. |
(10) |
6199. | 'பண்டு, வானவர் தானவர் யாவரும் பற்றி, |
| தெண் திரைக் கடல் கடைதர, வலியது தேடிக் |
| கொண்ட மத்தினைக் கொற்றத் தன் குவவுத் |
| தோட்கு அமைந்த |
| தண்டு எனக் கொளலுற்று, அது நொய்து எனத் |
| தவிர்ந்தான். |
|
பண்டு வானவர் தானவர் - முன்பு, தேவர்களும் அசுரர்களும்; யாவரும் பற்றி - ஆகிய எல்லோரும் பிடித்து; தெண் திரைக் கடல் கடைதர - தெளிந்த அலைகளை உடைய பாற்கடலை (அமுதம் வேண்டி) கடைவதற்கு;வலியது தேடிக் கொண்ட மத்தினை - வலிமை வாய்ந்ததாகத்தேடி கைக்கொண்டமத்தை (மந்தரமலை); தன் கொற்ற குவவுத் தோட்கு - தனது வெற்றி மிகுந்த திரண்ட தோளுக்கு; அமைந்த தண்டு எனக் கொளலுற்று - அமைந்த தண்டாயுதம் எனக் கொண்டுபின்; அது நொய்து எனத் தவிர்ந்தான் - அது அற்பமானது என்று விட்டு விட்டான். |
பண்டு - முற்காலத்தில் தானவர் - அரக்கர் கடல் - பாற்கடல் மத்து - மந்தரமலை குவவுத்தோள் - திரண்டு குவிந்த தோள். தண்டு - தண்டாயுதம் கொளல் உற்று - கொண்டு நொய்து - அற்பமானது (மிகச்சிறியது). |
(11) |
6200. | 'மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் |
| எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும், |
| கண்தலம் பசும்பொன்னவன் முன்னவன் காதில் |
| குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு விறல் |
| கூறல்? |
|
மண்தலம் தருகதிரவன்- நிலவுலகத்து உயிரினங்களைத் தனது ஒளியால் காக்கும் சூரியன்; வந்து போய் மறையும் - உதித்து, சென்று மறைகின்ற; எண்தலம் தொடற்கு அரியன - எண்ணுதற்குரிய மனத்தாலும் தீண்டுதற்கு இயலாதனவான; தடவரை இரண்டும் - விசாலமான மலைகளான உதயகிரி அத்தமன கிரி என்னு மிரண்டும்; கண் தலம் பசும் பொன்னவன் - பசிய பொன் போன்ற கண்களை உடைய இரணியாட்சனது; முன்னவன் - |