பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 281

உய்ஞ்சனென் அடியேன் என்று - அடியேன்   உய்ந்தேன்
என்று   கூறி;   ஊழ்முறை வணங்கி நின்ற - தனது நல்லூழால்
முறைப்படி வணங்கி நின்ற; அஞ்சன மேனியானை- மை போன்ற
நிறத்தை   உடைய வீடணனை; அழகனும் அருளின் நோக்கி -
பேரழகனாகிய   இராமபிரானும்   கருணையோடு  பார்த்து; தஞ்ச
நல்துணைவன் ஆன
-   நம்மை அடைக்கலம் அடைந்து நமக்கு
நல்லதொரு துணைவனானவனும்;   தவறு   இலாப்   புகழான்
தன்னை  
-   குற்றமற்ற   புகழை   உடையவனுமான   இந்த
வீடணனுக்கு; துஞ்சல் இல் நயனத்து ஐய- உறங்காத கண்களை
உடையவனே!(இலக்குவனை   அழைத்து)    சூட்டுதி   மகுடம்
என்றான்
-   இலங்கைக்கு     அரசனாதற்குரிய   மணிமுடியை
அணிவிப்பாயாக என்றான்.
 

'உய்ந்தனென்' என்பது   எதுகை நோக்கி உய்ஞ்சனென் என
வந்தது. ஊழ்-ஆகூழ். தஞ்சம் - அடைக்கலம்.  இராமபிரானுடன்
கானகத்தில்   வாழ்ந்த   நாளெல்லாம்   உணவும்   உறக்கமும்
இல்லாதிருந்தவன்   இலக்குவன் எனவே 'துஞ்சல் இல் நயனத்து
ஐய' என இராமபிரான்  அழைப்பானாயினான். இலக்குவனை முடி
சூட்டப்பணித்தது ஏன்?  எனில் வீடணனை ஏற்றுகொள்ளலாகாது
எனக் கூறிய சுக்கிரீவன்  முதலியோரைப்   போல   இலக்குவன்
எதுவும் பேசவில்லை என்றாலும் அவனுக்கும்   உடன்பாடில்லை
என உணர்ந்த இராமபிரான், வீடணனை அழைத்துவர, சுக்கிரீவனை
அனுப்பியது   போல,   அவனுக்கு   முடிசூட்ட இலக்குவனைப்
பணித்தான் என்க. 
 

(141)
 

6506.

விளைவினை அறியும் மேன்மை வீடணன், 'என்றும்

வீயா

அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை 

ஆயின், ஐய!

களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை 

தீர,

இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி' 

என்றான்.

 

விளைவினை அறியும் மேன்மை வீடணன் - மேலே நிகழ
இருக்கும்  நல்லவிளைவுகளை முன்னாலேயே தெரிந்து கொள்ளும்
மேன்மை உடையவனாகிய  வீடணன் இராமபிரானை நோக்கி; ஐய
என்றும் வீயா
- ஐயனே!  என்றும்   அழியாததாகிய;  அளவறு
பெருமைச் செல்வம் அளித்தனை
- அளவற்ற பெருமை  மிக்க
செல்வத்தை எனக்குத் தந்தாய்; ஆயின் - ஆனால்; களவியல்